Verse 218
ஓதடா ஆயிரத்தெண்ணுருவே செய்தால்
உண்மையென்ற ஆதிகணபதிதான் மைந்தா
நீதியுடன் உனதிடத்தில் நின்றுகொண்டு
நீநினைத்த காரியங்கள் வசியஞ் செய்வார்
பேதமென்ற வேதமெல்லாம் வசியமாகும்
பேரண்டஞ் சித்தண்டம் வசியமாகும்
வேதமென்ற வேதமொடு சாஸ்திரங்கள்
விளங்கிநின்ற மந்திரங்கள் வசியமாமே
Translation:
Son, if you
recite it thousand eight times
Truthfully,
Son, the Adi Ganapathy,
Will remain in
you
Will attract
the fruits of the actions
The different
knowledge systems will come under your control
The macrocosm
and microcosm will come under control
The Veda and
sastras
And all the
mantra will come under control.
Commentary:
Vasiyam is charm
or making an object come to you.
Agatthiyar says that if one recites the mantra, siva siva om reeng ang,
mentioned in the previous verse is recited 1008 times the Adi Ganapathy will remain
with the yogin and make all the actions one wishes to perfom come to him. All the knowledge systems, scriptures and mantra
will be attracted towards the yogi, by Adi Ganapathy’s grace.
Vasiyam or
vaseekaram is usually mentioned in the bad connotation, that it is invokes to
attract people towards themselves. Men use mantras to attract women towards
themselves and women use magical potions and mantra to attract men towards
themselves. Agatthiyar explains the true
meaning of vasiyam. Its actual purpose
is to make worthwhile actions fruitful, to acquire the knowledge and attain
mantra siddhi.
வசியம் என்பது ஒன்றைத் தன்னிடம் வரச் செய்வது. பொதுவாக இந்த கர்மம் கெட்ட நோக்கிலேயே
பார்க்கப்படுகிறது. ஆண் பெண்ணைக்
கவருவதற்கும் பெண் ஆணைக் கவருவதற்கும், பிறரைக் கவருவதற்கும் பயன்படுவதே வசியம்
என்று பொதுவாகக் கருதப்படுகிறது. முன்
பாடலில் கூறிய சிவ சிவ ஓம் றீங் அங் என்ற மந்திரத்தை ஆயிரத்தெட்டு முறை ஓதினால்
ஆதி கணபதி ஒருவரிடம் நின்று அவர் காரியங்கள் அறிவு முறைகள், வேதம், சாஸ்திரம்,
மந்திரம் ஆகியவற்றை அவரை நோக்கி வசியம் செய்வார் என்று அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment