Sunday, 25 October 2015

213. Parppam and karppam

Verse 213                                                          
பற்பமென்ற உற்பனத்தை யார்தான் காண்பார்
பதிவான நகாரமுடன் மகாரஞ்சேர்த்து
உற்பனமாய்க் காரமுடன் பூரங்கூட்டி
உறுதியுடன் பூரண நீர் தன்னாலாட்டி
கற்பமென்று அற்புதமாய் புடமே செய்தால்
கசடற்று நீறியது பற்பமாகும்
அற்புதமாய் நீறினதோர் பற்பந்தன்னை
அங்கமென்ற சங்கதியை அறிந்து வூட்டே

Translation:
The parpam, the emergence- who can see it?
Adding the makaara to the nakaara
Adding kaaram and pooram for the emergence
Grinding with the water of poorna, firmly
If it is processed in fire as karpam
The water which is free of impurities will become parppam
The wonderful parppam made of water
Knowing that it is the part, add it.

Commentary:
Parppam and karppam are medicinal preparations.  Agatthiyar uses these terms in the context of creation.  He says that nakaara and makaara are added to kaaram and pooram.   Nakaara corresponds to thirodana sakthi and makaara corresponds to anava.  The triple innate faults, aanava, karma and maya are indiciated here as as the maya and karma operate through the tirodhana sakthi.  Souls, under the rule of aanava are driven by the tirodhana sakthi that includes maya and karma and thus live in the manifested world as life forms.  Kaaram and pooram corresponds to sakthi.  Poornam corresponds to supreme consciousness, its nadha state.  The fire mentioned here is the fire of kundalini.  The water referred to is the jaya neer or victory water we saw before.  The result is parppam, the Tamil term for bhasma or ash.  Agatthiyar says that while adding it, it must be remembered that the parppam made of water is a part.  He explains this further in the next verse.

பற்பம், கற்பம் என்பவை சித்த மருத்துவச் சொற்கள்.  அகத்தியர் இந்த சொற்களைத் தோற்றம் என்ற ரீதியில் பயன்படுத்தியுள்ளார். நகாரத்துடன் மகாரத்தைச் சேர்த்து அதனுடன் காரத்தையும் சாரத்தையும் சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  நகாரம் என்பது திரோதான சக்தியையும் மகாரம் ஆணவத்தையும் குறிக்கும்.  திரோதான சக்தி மாயையும் கன்மத்தையும் உள்ளடக்கியது.  இவ்வாறு ஆணவம் திரோதான சக்தியுடன் சேர்ந்து மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை என்று உயிர்களை அளவுக்குட்பட்டவர்களாகச் செயல்பட வைக்கின்றன.  காரம் பூரம் என்பது சக்தி நிலைகள்.  இவற்றை பூரணம் என்ற நீரைச் சேர்த்து ஆட்டவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இங்கு பூரணம் என்பது பராபரத்தின் நாத நிலையைக் குறிக்கிறது.  இந்தக் கலவையை தீயிலிட்டு பஸ்மமாக்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இங்கு தீ என்பது குண்டலினி அக்னி.  இவ்வாறு மாற்றமடையச் செய்யப்படும் நீர் ஜெயநீர் என்று முன்னம் பார்த்தோம்.  இந்த நீர் ஒரு பகுதி என்று நினைவில் கொண்டு அதைக் கூட்டவேண்டும் என்கிறார் அகத்தியர்.

இதை அடுத்த பாடலில் மேலும் விளக்குகிறார். 

No comments:

Post a Comment