Verse 206
முப்புச் சுன்னம்
வாசிக்குஞ் சீதமலர் முப்புமாச்சு
வாடாத முப்பூவை யார்தான் காண்பார்
தேசிக்கு உப்பூவைச் சொல்லக் கேளு
நிசமான சத்தமடா பூமி நாதம்
பூசிக்கும் பூ நாதம் பூரஞ் சத்தி
பொருந்திநின்ற சவுக்காரம் அண்ட மாது
காசிக்கு மேலான கன்னி கன்னி
கைலாச மனங் கொண்ட முப்பூவாச்சே
Translation:
Muppu sunnam
The cool
flower became the muppu for vaasi
Who sees the
unwithering muppu?
Listen to the
explanation of the muppu for the one interested in wisdom
The truthful
sound is the bhumi nadham
The pooram is
sakthi
The savukaaram
is the lady of the universe
The lady above
the Kasi
These are the
muppu, the mind that has Kailasa (as the goal).
Commentary:
The concept of
muppu has been debated by siddha medical practitioners as well as
philosophers. Agatthiyar describes muppu
in this verse. The word ‘sunnam’ means
soonya. Soonya does not mean it contains
nothing. It means it is pregnant with
everything. Another word for this tem is
paazh.
Agatthiyar
says that the muppu is the unwithering flower which is a combination of bhu nadham,
pooram which is sakthi and the savukkaaram which is lady of the universe
(andam). The term andam refers to both, the universe and space in the cranium.
She is the maiden who remains above Kasi, the ajna cakra. In Siddha parlance
Kailasa refers to Sahasrara.
முப்பு என்ற தத்துவம் சித்தர்கள் வழிமுறையில் பெரிதும்
விவாதிக்கப்படும் ஒன்று. மருத்துவர்கள்
அதை மூன்று உப்புக்கள் என்று கூறுகின்றனர்.
இப்பாடலில் அகத்தியர் முப்பு என்றால் தத்துவரீதியில் என்ன என்று விளக்குகிறார். சுன்னம் என்ற சொல் சூனியம் என்பதன் மருவு. சூனியன் என்றால் ஒன்றும் இல்லை என்று பொருளல்ல, அனைத்தையும் உள்ளடக்கியது என்று பொருள்.
முப்பூ என்பது வாடாத பூ என்கிறார் அகத்தியர். அது பூநாதம், பூரம் என்னும் சக்தி மற்றும்
சவுக்காரம் எனப்படும் அண்ட மாது என்ற மூன்றும்தான் என்கிறார் அவர். நாதம் என்பது சக்தியிலிருந்து பிறப்பது. பராபரையிடமிருந்து பிறப்பதே நாதம். பூரம் என்னும் சக்தி என்பது பரையைக்
குறிக்கும். அண்டம் என்பது உலகங்கள் என்ற
பொருளுடன் கபாலத்தில் உள்ள சக்தியையும் குறிக்கும். இவ்வாறு முப்பு என்பது சக்தியின் பல நிலைகளைக்
குறிக்கும். அகத்தியர் சக்தியை காசிக்கு
மேல் இருக்கும் கன்னி என்கிறார். காசி
என்பது ஆக்ஞையைக் குறிக்கும். சித்தர்கள் பரிபாஷையில் கைலாசம் என்பது
சகஸ்ராரத்தைக் குறிக்கும்.
No comments:
Post a Comment