Verse 214
அறிந்துகொண்டு ஆதாரம் நன்றாய்ப் பார்த்து
ஆதியென்ற பற்பமொடு சுன்னம்ரெண்டாம்
வருந்தி மனக் கனிவதனால் செய்து மைந்தா
வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரு
தெரிந்துசடந் தானறிந்து யோகம்பாரு
தீர்க்கமுள்ள மார்க்கமென்று சொல்லக்கேளு
பொருந்திநின்ற அஷ்ட கன்மஞ் சித்துபெற்றால்
பூரணமா அஷ்டாங்க யோகமாமே
Translation:
Knowing this,
seeing the substrata well
There are two
entities- the Origin- parppam and sunnam (sunya)
Son, by
maturing and melting the heart with effort
Perceive
ashtanga yoga in the proper way.
Knowing about
the body, perceive yoga
Listen to it
being called the long and definite pathu
If the ashta
karma sitthu is attained
Then the
ashtanga yoga has been completed fully.
Commentary:
In the
previous verse Agatthiyar mentioned that the parppam was a part. Now he explains this further. Parppam refers to the manifested state of the
Divine, the Primal one or Adhi. The
other part is sunnam or sunya, the unmanifested state pregnant with everything. Agatthiyar tells Pulatthiyar that this
principle should be perceived with a mature heart, a heart that is melting with
love. This is the right way to perceive
ashtanga yogam. He says that knowing the
nature of the body and soul yoga should be performed. He also adds that when one attains the ashta
karma sitthu or mystical accomplishments it means the ashtanga yoga has been
completed properly. Thus, Agatthiyar
tells us that ashta karma siddhi are nothing but milestones in the path towards
ultimate goal. They are not the end that
a yogin should seek.
முந்தைய பாடலில் அகத்தியர் பற்பம் ஒரு பகுதி என்று கூறினார். இப்பாடலில் அது எதன் பகுதி என்று விளக்குகிறார். பற்பம் என்பது இறைமையின், ஆதியின் முழுவதுமாக
வெளிப்பட்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.
சுன்னம் அல்லது சூனியம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய ஒருமை நிலையைக்
குறிக்கும். இவ்வாறு வெளிப்பாடு ஒருமை
என்ற இருநிலைகளில் பற்பம் ஒரு பாதியாகும்.
இந்தா உண்மையை ஒருவர் கனிந்த மனத்துடன் பார்க்கவேண்டும் என்கிறார்
அகத்தியர். கனிந்த மனம் என்பது
முதிர்ச்சியடைந்த மனம் என்றும் அன்பால் கனிந்த மனம் என்றும் இருபொருள்களைத்
தருகிறது. இந்த நிலையில் அஷ்டாங்கயோகத்தைப்
புலத்தியர் பார்க்கவேண்டும் என்றும் சடம் அல்லது உடலையும் உயிருடன் அதன்
தொடர்ப்பையும் அறிந்து யோகம் அல்லது பரவுணர்வுடன் சேர்க்கையை ஒருவர் சரியான
முறையில் முயலவேண்டும் என்கிறார் அகத்தியர்.
இவ்வாறு செய்யும்போது அஷ்ட கர்ம சித்திகள் ஏற்பட்டால் அது அஷ்டாங்க யோகம்
பூரணமாகச் செய்யப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் என்றும் அவர் கூறுகிறார். இவ்வாறு
அவர் ஒரு யோகி அஷ்ட கர்ம சித்தியை ஒரு மைல்கல் என்று மட்டுமே கருத வேண்டும், அதையே
முடிவாகக் கருதக்கூடாது என்று தெளிவாகக் கூறுகிறார்.
No comments:
Post a Comment