Friday, 16 October 2015

196. Ukaara deeksha

Verse 196
பண்ணப்பா சிவமான அகார தீக்ஷை
பத்திக்கொண்டு பூரணமாய்ச் செய்தபின்பு
நண்ணப்பா உகாரமென்ற சத்தி தீக்ஷை
நன்மையுடன் சொல்லுகிறேன் ஆண்மைகேளு
விண்ணப்பா கண்ணான மூலத்தீயில்
விளங்கிநின்ற உகாரமென்றும் சத்திஎன்றும்
முன்னப்பா நிறைந்த சிவ சத்தியோடே
முத்தியுள்ள அகாரமென்ற வஸ்து சேரே

Translation:
Perform the akaara deeksha, the sivam
After performing it with complete devotion
Seek the ukaara, the sakthi deeksha
I will tell you, listen to it.
See in the important entity,the fire of mula
That which remains as sakthi, as ukaara.
Along with siva's sakthi
Join the liberating entity, the akaara.

Commentary:
After attaining the benefits of akaara deeksha Agatthiyar says that the yogin should perform ukaara deeksha.  The verse talks about mula fire.  This may mean the fire of kundalini in muladhara.  Agatthiyar says that this Sakthi, ukaara should be joined to the akaara, original bindu.


அகார தீட்சையைப் பெற்ற பின் உகார தீட்சையைச் செய்ய வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  உகார தீட்சை என்பது மூலத்தீ என்கிறார் அவர்.  மூலத் தீ என்பது மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அக்னியைக் குறிக்கும்.   சிவசக்தியோடு அகாரம் எனப்படும் பிந்துவை சேர்ப்பதே உகார தீட்சை என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment