Friday, 23 October 2015

210. Agatthiyar reveals how the cakras are created

Verse 210
பண்ணியதோர் வட்டதுவும் நன்றாய்க்காய்ந்தால்
பாலகனே மண் சீலை வலுவாய்ச் செய்து
புண்ணியனே நிறையறிந்து புடத்தைப் போடு
பூவான முப்பூவுஞ் சுன்னமாச்சு
கண்ணிறைந்த சுன்னமடா கமலச்சுன்னங்
காரமுள்ள சுன்னமதிற் சாரஞ்சேர்க்க
வன்னிஎன்ற ஜெயநீரை என்ன சொல்வேன்
வாநிரைந்த நீரதிலே வீரஞ்சேரே

Translation:
The cake, when it dries well
The young one! Cover it will cloth and mud
The blessed one! Knowing the state by sublimating with fire
It becomes the muppu sunnam
The sunnam that fills the eyes, the lotus sunnam
In the “kaaram” of the sunnam add the “saaram”
The jaya neer (victory water), which is fire- I will tell you
In the water that is suffused with space add the veeram.

Commentary:
Agatthiyar is describing a medical procedure that is also philosophical.  He says that the vatu or cake is then covered with a cloth and sealed with mud.  This process is called “man seelai”.  In the philosophical context the Supreme Being which is flame of consciousness, and space along with nadha is covered with a subtle and material body.  Thus, a body is created with the Divine within it as effulgence, space and primordial sound.  This may also mean the chakras, the cakes are covered with different principles ending with the earth principle.  This the sunnam or void of lotus that is beyond visual perception.  This is the sunnam of kaaram, the void manifestation.  To this is added saaram or essence.  In the philosophical context this refers to Sakthi in different forms.  This, Agatthiyar calls as vanni or fire or the jaya neer or victory water.  To this added veeram, which we saw before to be mercury or Siva bheejam, si. 

All the yoga works talk about the cakras but none describe how they are created.  Only Agatthiyar has described the procedure in which the cakras or energy centers are created, what they contain.


ஒரு மருத்துவத் தயாரிப்பைப் போலத் தோன்றும் இப்பாடல் தத்துவரீதியாகவும் பொருள் தருகிறது.  முந்தைய பாடலில் வட்டு செய்வதைப் பற்றி அகத்தியர் விளக்கினார்.  இறைவனின் ஒளி, வெளி நாத தத்துவங்களைச் சேர்த்து வட்டு செய்யப்பட்டது.  அந்த வட்டை மண் சீலை செய்யவேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  மண் சீலை என்பது மருத்துவப் பொருட்களை ஒரு பானையில் இட்டு அதன் வாயைத் துணியால் கட்டி அதனை மண்ணால் பூசுவது.  அவ்வாறு மண் சீலை செய்ய வட்டை புடமிடவேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த முறை தத்துவ ரீதியாக இறைவனின் உணர்வு அல்லது அறிவாகிய ஒளி, வெளி அல்லது ஆகாயம் என்ற மூன்று தத்துவங்களை எடுத்து அதை வட்ட வடிவமான ஒன்றாகச் செய்து அதை சீலை, மண் ஆகியவற்றால் மூட வேண்டும்.  இங்கு சீலை, மண் என்பவை சூட்சும மற்றும் ஸ்தூல உடல்களைக் குறிக்கும்.  இவ்வாறு செய்யப்பட உருவை குண்டலினி அக்னியால் புடமிடவேண்டும்.  புடமிடுதல் என்றால் பானை எல்லாப் பக்கமும் வரட்டியால் மூடி தீமூட்டுவது.  இவ்வாறு சுடப்படதே சக்கரம் என்று அடுத்த வரியில் அகத்தியர் கூறுகிறார்.  சக்கரங்களை அவர் கமலச் சுன்னம் என்றும் அது கண்கொள்ளாத சுன்னம் என்றும் கூறுகிறார்.  இப்போது அதனுடன் காரத்தையும் சாரத்தையும் சேர்க்கவேண்டும். அவை வன்னி அல்லது ஜெயநீர் என்கிறார். இவை சக்தி நிலைகள்.  முடிவில் வீரம் எனப்படும் சிவ பீஜம் சேர்க்கப்படுகிறது.  இவ்வாறு அகத்தியர் சக்கரங்கள் எவ்வாறு உருவாக்கபடுகின்றன என்று கூறுகிறார்.  அனைத்து யோக நூல்களும் சக்கரங்களைப் பேசுகின்றனவே ஒழிய அவை எவற்றால் ஆனவை என்று கூறுவதில்லை.  அகத்தியரே இதை விளக்குகிறார். 

No comments:

Post a Comment