Verse 208
காணாத முப்பூவைக் கண்டால் மைந்தா
கருவான காரமுடன் காரஞ் சேரு
பானான காரமதிற் காரஞ் சேர்த்து
பரிதிமதிச் சுடரான செய நீராச்சு
தேனாக செயநீரில் வீரஞ் சேர்க்கச்
சிவந்ததொரு சென்னீராய் நாதமாச்சு
ஊனான நாதமதைப் பானம் பண்ணி
உப்பு முதல் கற்பூரம் வரையுங் கூட்டே
Translation:
If you see the
muppu that is hard to see
Add the
essence, the kaaram along with kaaram
After adding
kaaram to kaaram
It became the
sun, moon and flame- the victorious water
Adding the
veeram to the honey-like jayaneer (victory/sacred water)
It became the
ruddy, reddish, nadha
Turning the
body, the nadha into a liquid
Add it from
uppu (salt) upto karpuram (amphor)
Commentary:
Agatthiyar
takes the previous verse further. He
says that when Pulattihyar sees the muppu which is hard to see he should add
the two kaaram. Here kaaram means akaaram
and ukaaram, not spice!. Akaara and
ukaara are bindu and nadha. The bindu,
eventhough it is later than nadha in emergence, needs nadha to activate
it. Thus, Siva needs Sakthi! After adding the akara and ukara the triple
fires of sun, moon and flame should be kindled.
Agatthiyar says that this is jayaneer or victory water. In this water Agatthiyar wants Pulatthiyar to
add veeram. Veeram or saveeram is mercuric chloride. It is considered Siva bheejam or the seed of
Siva. Agatthiyar suggests that veeram
should be added to the jaya neer. This
means adding the Siva bheeja to the kundalini practice where the agni, surya
and Chandra mandala are included along with nadha and bindhu or the akaara and
ukaara. The Siva bheeja is si. Adding these from uppu to karpooram means
making the kundalini sakthi flow from the manifestated state to the supreme
state which is equated to camphor.
Camphor moves between form and formlessness, similar to the Supreme
state of the Divine.
முந்தைய பாடலை மேலும் தொடர்கிறார் இப்பாடலில். காண்பதற்கு அறியமுப்பூவைக் கண்டால் அதனுடன்
இரண்டு காரம் சேர்க்கவேண்டும் என்கிறார் அவர்.
இங்கு காரம் என்று குறிக்கப்படுபவை அகாரமும் உகாரமும். அகாரம் என்பது பிந்து
உகாரம் என்பது நாதம் என்று முன்பு பார்த்தோம். அகாரம் சிவம் என்றும் உகாரம்
சக்தி என்றும் குறிக்கப்படுகின்றன. பிந்து
நாதத்துக்குப் பிறகு தோன்றினாலும் அதை செயல்படச் செய்ய நாதம் தேவையாக இருக்கிறது. இவ்வாறு சிவம் செயல்பட சக்தி தேவை! இந்தக் கலவையைக் கூட்டியபிறகு முத்தீயை
எழுப்பவேண்டும் என்கிறார் அகத்தியர். முத்தீ என்பது அக்னி, சூரியன் மற்றும்
சந்திரன். இவை மூன்று மண்டலங்கள் என்று
முன்னமே பார்த்தோம். இவற்றை செயநீர்
என்கிறார் அவர். இந்த செயநீர் அல்லது
வெற்றி நீருடன் வீரத்தைச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் அடுத்து கூறுகிறார். வீரம் என்பது சவ்வீரம் எனப்படும் பாதரசம். பாதரசத்தை சிவ பீஜம் என்பர். சிவ பீஜம் என்பது சி என்னும் எழுத்து என்று
மேலே உள்ள பாடல்களில் பார்த்தோம். இவ்வாறு
இந்த இரண்டு பாடல்களின் மூலம் அகத்தியர் லயத்தைக் குறிக்கிறார். இந்த குண்டலினி யோகப் பயிற்சியை உப்பு முதல்
கற்பூரம் வரை உயர்த்த வேண்டும் என்கிறார் அவர்.
உப்பு என்பது உகாரத்தை, மூலாதாரத்தைக் குறிக்கும். கற்பூரம் என்பது பரவெளியைக் குறிக்கும். உருவிலிருந்து அருவமாவது கற்பூரம். முடிவில் பரவெளியில் கலந்து விடுகிறது. இது ஜீவன் உருவ நிலையிலிருந்து அருவ நிலையை
அடைவதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment