Verse 204
சித்துமய மாவதற்கு மைந்தாமைந்தா
தீர்க்கமுடன காரமத்தை யாண்டு சேவி
முத்திபெற செபித்தபின்பு உகாரந்தன்னை
மூர்க்கமுடன் ஆண்டொன்று செபித்துக்கொள்ளு
பத்தியுடன் செபித்தபின்பு மகாரந்தன்னை
பாலகனே ஆண்டொன்று பதியாய்ச் சேவி
புத்தியுடன் இது மூன்றுஞ் செபித்துத் தீர்த்தால்
பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே
Translation:
Son, son, to
become the embodiment of chith (consciousness)
You worship
akaara firmly for a year
After reciting
it, to attain mukhti, the ukaara
Chant it for a
year with force
After chanting
it with devotion, the makaara
Little boy,
you worship for a year as the Lord
If you
complete chanting these three with intellect
The poorna
(fully complete) will fit with kaarana (cause).
Commentary:
Agatthiyar
says that the akaara should be recited for a year followed by chanting of
ukaara for a year and makaara for a year each.
If this is performed with discrimination (buddhi) Agatthiyar says that
kaarana or supreme cause and poorna or supreme entity will fit with each
other. This is the state of
singularity. Supreme consciousness and
its power or the supreme cause fit with each other and become a single entity.
அகாரத்தை ஒரு வருடமும் அதைத் தொடர்ந்து உகாரத்தை ஒரு
வருடமும் அதனை அடுத்து மகாரத்தை ஒரு வருடமும் செபிக்கவேண்டும் என்கிறார்
அகத்தியர். இது புத்தியுடன் செய்யப்பட வேண்டும்
என்றும் அவர் கூறுகிறார். அவ்வாறு
செய்தால் காரணமும் பூரணமும் ஒன்றாகப் பொருந்தும் என்றும் அவர் தொடர்கிறார்.
No comments:
Post a Comment