Wednesday, 14 October 2015

189. Lighting up the six adhara with siva jyothi

Verse 189
பாரப்பா தீபமென்றால் அறிவின் கண்ணு
பத்திகொண்டு அறிவதினால் புருவமேவி
சாரப்பா கண்டமதில் அங்கென்றூணி
சதாபோத பூரணமாய் நின்று பார்த்தால்
நேரப்பா நின்றிலங்குஞ் சோதிபோலே
நித்தியமுஞ் சுத்தமுடன் நினைவாய்ப் பார்த்தால்
ஆரப்பா வென்றதொரு ஆறாதார
மாதிசிவ சோதிமயமாகுந்தானே

Translation:
See son, the flame is the eye of consciousness
Holding on with consciousness and reaching the brows
Plant firmly in the throat as the letter “ang”
If you remain as bodha purna (fully complete consciousness) and perceive
It will glisten like a lamp
If this is perceived daily with purity and awareness
The six adhara
Will become sivajyothimayam  (embodiment of the flame of supreme consciousness).

Commentary:
When a yogin reaches ajna the flame of consciousness is perceived for a short duration.  He has to attempt this practice consistently, all the time, with mental focus.  Agatthiyar says that one has to plant the flame of consciousness at the ajna and the sound of the letter ang at the throat and remain in that state to perceive the atma jyothi.  If this is practiced for a while then all the six adhara or cakra will be lighted up by the light of Supreme consciousness.  They will become Sivajyothimayam.


ஆக்ஞையை அடைந்த யோகி அங்கு ஆத்ம சோதியைப் பார்ப்பார்.  அது ஒரு சில நொடிகளே அவருக்கு தரிசனம் அளிக்கிறது.  அந்த தரிசனத்தைத் தொடந்து அவர் நித்தமும், இடைவிடாமல், சுத்த நிலையில், விழிப்புணர்வுடன் அறிவை ஆக்னையில், புருவ மத்தியில், ஊன்றி கண்டம் எனப்படும் தொண்டை அல்லது விசுத்தி சக்கரத்தில் அங் என்ற ஓசையுடன் இடைவிடாது பார்த்தால் அந்த சோதி நிலைபெற்று நின்று பிற ஆறு ஆதாரங்களையும் சிவசோதிமயமாகுக்கும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு உடல் முழுவதும் பரவுணர்வு என்ற சோதியால் ஒளிருகிறது.

No comments:

Post a Comment