Wednesday, 14 October 2015

188. Omkara is the muladhara

verse 188
காணவே ஓங்காரம் ஓம்பிரதானம்
கருணை வளர் ஆதார மூலபீடம்
தோணவே மூலமென்ற ஆதாரத்தில்
துலங்கி நின்ற ஆவியடா வாசியாச்சு
பேணவே ஆவிஎன்ற வாசியேறி
பெருகிநின்ற ஆதாரங் கடந்தப்பாலே
பூணவே ரவிமதியின் சுடரில் சென்று
புத்தியுடன் பூரணமாய்த் தீபம் பாரே

Translation:
See, the Omkara is the most important,
It is the merciful substratum of support, the original dais (adhara mula peetam)
In the muladhara
The spirit that remained became vaasi,
The spirit, the vaasi ascending/climbing,
Crossing the adhara and going beyond
Going through the sun, moon and flame
See the lamp, becoming fully complete through intellect (buddhi).

Commentary:
Agatthiyar says that the pranava is the substratum of everthing.  Muladhara represents the origin, the primary substratum- moola+adhaaram.  Omkara in the muladhara represents the fully manifested state.  Agatthiyar says that the spirit that remains in the muladhara is the lifeforce- vaasi.  It ascends the cakras stirring out of muladhara and reaches the ajna the spot of sun, moon and flame- the chandrakala, suryakala and agni kala.  These three are in harmony at the ajna.  At this spot the flame of consciousness is perceived. This is the atma darsanam.  Agatthiyar says that this possible only through intellect when the soul crosses the limitations of asuddha maya and attains a pure state. This process is called praasaada yogam.


ஓம் என்னும் பிரணவமே அனைத்துக்கும் ஆதாரம் என்கிறார் அகத்தியர்.  உயிருக்கு மூல ஆதாரம் என்கிறார் அவர். அங்கிருக்கும் ஆவிதான் வாசி.  அந்த வாசி பிற ஆதாரங்களின் ஊடே ஏறி ஆக்ஞையை அடைகிறது.  அங்கு ரவி, மதி, சுடர் எனப்படும் சந்திர கலா, சூரியகலா அக்னி கலா என்ற மூன்றையும் ஊடுருவிப் போய் தீபம் எனப்படும் ஆத்ம தரிசனத்தைப் பெறுகிறது என்கிறார் அகத்தியர்.  இது மலங்களைக் கடந்து சுத்த நிலையை, பூரண நிலையை அடைந்தால் காணக்கிடைக்கிறது என்கிறார் அவர்.  இதுவே பிராசாத யோகம் எனப்படுகிறது.

No comments:

Post a Comment