Verse 212
பண்ணப்பா சத்திசிவ பூசைப் பண்ணிப்
பதிவான சிவயோகம் பார்க்கும்போது
கண்ணப்பா தன்னிலையில் கருணையாகுங்
கருணை வளர் தீபமதில் தீபங் காணும்
விண்ணப்பா நிறைந்ததொரு தீபங்கண்டால்
வேதாந்த தேகமடா முத்தியாச்சு
முண்ணப்பா நிறைந்த சிவ முத்தியாலே
முத்தியுள்ள அமுர்தரச பற்பங் கேளே
Translation:
Perform son,
Sakthi Siva worship
When
experiencing the Siva yoga
The eye in its
original state will become mercy,
In the
merciful flame the flame is seen
If you see the
flame that pervades the sky
The Vedanta
body will attain liberation
Due to the
Siva mukhti
Listen about
the amrita rasa parppam in the state of mukhti.
Commentary:
Siva yogam is limited
consciousness joining the supreme consciousness. When this state is reached the flame of consciousness
is seen. Agatthiyar calls this as the
lamp in the lamp. When this flame is
seen it indicates the state of kaya siddhi or Vedanta deha mukhti. This siva mukhti makes the amrita rasa flow
from the lalata.
சிவ யோகம் என்பது அளவுக்குட்பட்ட அறிவு உயருணர்வு நிலையுடன்
சேர்வது. இந்த நிலையை அடைந்தால் கருணை பொங்கும். அப்போது தீபத்துள் தீபம் காணும். இந்த விண் அல்லது ஆகாயம் நிறைந்த தீபத்தைக் கண்டால்
வேதாந்த தேக முக்தி கிட்டும் என்கிறார் அகத்தியர். இதுவே காயசித்தி எனப்படுகிறது. இந்த காயசித்த சிவ முக்தியை அளிக்கும். அதனால் லலாடத்திலிருந்து அமிர்ந்தரசம் சுரக்கிறது. இதை அகத்தியர் அமிர்தரச பற்பம் என்கிறார்.
No comments:
Post a Comment