Friday, 16 October 2015

199. Attaining the state of Brahman, Praasaadha yogam

Verse 199
ஆமென்ற மகாரமுடன் மைந்தாகேளு
அருள்பெருக அகாரமுடன் மைந்தாகேளு
ஓமென்ற பிரணவத்தின் மகிமையாலே
உறுதியுடன் மூன்றெழுத்துஞ் செவித்தாயாகில்
தாமென்ற தன்னிலையே பிரம்மமாகி
தானாகித் தானவனாய் தான் தானாவாய்
நாமென்ற நாதாந்த முத்தியாலே
நடுவெழுத்து மூன்றெழுத்துஞ் சித்தி தானே

Translation:
Son listen, along with makaara
Along with akaara, for grace to secreet copiously, listen son
By the glory of omkara
If you chant the three letter
Attaining the state of Brahmam
You will attain the state of self, the state of self as Self, and that of Self
Due to the nadhantha mukthi
The middle letters the three letters grant this accomplishment.

Commentary:
Agatthiyar is indicating that he is talking about the prasaada yogam in these verses.  Praasaadha yogam is also called dvadasa margam or the path of twelve.  The singular omkara is split into subtle twelve parts and they are attained through yogam.  They are medha kala (akaara), arukkeesam (ukaara), visha kala (makaaram), bindhu kala, arddha chandra (subtle and causal levels of bindu), nirodhini kala, nadha kala, nadhantha kala, sakthi kala, viyapini kala, samana kala and unmana kala.  Transcending these states the soul reaches the supreme state of singularity.  Kashmir Saivam calls this Bhairava state, the state of Brahman.    
This process proceeds through different states of distinctions- that of limited self and supreme self (I and that), the limited self becoming supreme self (I am that) and becoming the supreme self (that).  The terminal state is called Bhairava in Kashmir Saivam.


அகார தீட்சை, உகார தீட்சை, மகார தீட்சை என்று தான் இதுவரை பேசியது பிராசாத யோகம் என்று இப்பாடலில் அகத்தியர் விளக்குகிறார்.  ஓம் என்னும் பிரணவத்தை பன்னிரு நுண்ணிய பிரிவுகளாகப் பிரித்து தியானத்தின் மூலம் உச்ச நிலையை அடைவதே பிராசாத யோகம்.  இந்த நிலைகள் மேதை (அகாரம்), அருக்கீசம் (உகாரம்), விஷ கலை (மகாரம்), விந்து கலை, அர்த்த சந்திரன் (பிந்துவின் சூட்சும, காரண நிலை) நிரோதினிக்கலை, நாதகலை, நாதாந்த கலை, சக்திகலை, வியாபினிக்கலை, சமனைக்கலை, மற்றும் உன்மனைக் கலை என்பவையாகும்.  ஜீவன் இந்த நிலைகளைக் கடக்கும்போது அது உச்ச நிலையை அடைகிறது.  இதை காஷ்மீர சைவம் பைரவ நிலை என்கிறது.  இந்த நிலையே பிரம்மமாகும்.  இந்த நிலையை அடைய இது சீவன் தான் அவன், மற்றும் தானே அவன் மற்றும் அவன் என்ற மூன்று நிலைகளைக் கடக்கிறது.  இந்த முக்தியை அருளுவது அகாரம், உகாரம், மகாரம் என்ற மத்திய மூன்றெழுத்துக்கள்  என்று அகத்தியர் இங்கு குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment