Verse 200
சிகார தீக்ஷை
காணவே மூன்றெழுத்துங் கருணையாகக்
கூட்டாகச் செபித்த பின்பு இன்னங் கேளு
பேணவே சிகாரமென்றால் ஆர்தான் காண்பார்
பேரண்டமான பூரணமேயாகுந்
தோணவே பூரணத்தைக் கண்டுகொண்டு
சுகமான சிவசத்தி வாலையோடே
ஊணவே தானிருத்தி செபித்தால் மைந்தா
பூரணமாய்க் காயசித்தி புனிதமாமே
Translation:
Sikaara
deeksha
Seeing the
three letters as mercy
After reciting
them together, listen some more
Who will see
if it is said sikaara?
It is the
great universe of purna
Seeing the
poorna
Along with
Siva Sakthi and Vaalai
If you plant
it firmly and recite, son
Kayasiddhi
with purity will be attained.
Commentary:
Agatthiyar is
describing another concept, that of the Divine in the distinction-less
state. It is called purna or fully
complete. This state is above the state of distinction as Siva and Sakthi. Agatthiyar says that the yogin should keep
this state in mind while perform the kundalini yoga along with Siva, Sakthi and
Vaalai states. If this yoga is performed
so Agatthiyar says that kayasiddhi will grant purity.
Let us see a little about the letter si. Sivavaakkiyar says that in the mantra
namasivaya the letter si is the letter of Siva.
Tirumular calls this the maha kaarana panchaksharam and says that it is
this letter that expands as the four Vedas, it is the locus of the Lord, it is
the effulgence beyond the terminus of nadha.
அகத்தியர் மற்றொரு விஷயத்தை இப்பாடலில் கூறுகிறார். முந்தைய பாடலில் அவர் குண்டலினி யோகத்தைச்
செய்யும் யோகி சிவ நிலை, சக்தி நிலை மற்றும் வாலை நிலைகளை மனத்தில் கொள்ளவேண்டும்
என்றார். இங்கு அவர் அவற்றுடன் பூரண
நிலையையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்.
பூரண நிலை என்பது சிவம் சக்தி என்ற
வித்தியாசங்களைக் கடந்த நிலை. எல்லையற்ற
உச்ச நிலை. இவ்வாறு யோகத்தை மேற்கொண்டால்
காயசித்தி புனிதத்தை அருளும் என்கிறார் அகத்தியர்.
இங்கு சிகாரம் என்ற எழுத்தைப் பற்றிச் சிறிது பார்ப்போம். நமசிவாய
என்ற மந்திரத்தில் சி என்ற எழுத்து சிவனின் எழுத்து என்கிறார் சிவவாக்கியர். திருமூலர் அதை மகா காரண பஞ்சாட்சரம் என்று கூறி
அந்த எழுத்தே நான்கு வேதங்களின் பொருளாக விரிந்தது. அதுவே கடவுளின் இருப்பிடம், இதுவே நாதாந்த ஒளிப்பொருள் என்கிறார்.
No comments:
Post a Comment