Wednesday, 28 October 2015

215. Ashta karma-1

Verse 215
அஷ்ட கர்ம விபரம்
யோகமென்ற அஷ்டாங்க யோகம் பார்க்க
உத்தமனே அஷ்டகர்மஞ் சித்து கேளு
ஆமென்ற தேக நவக்கிரக மாச்சு
ஆதியென்ற அனுக்கிரக முடியில் நின்று
பாகமென்ற ஆதார மூலந்தன்னை
பத்திகொண்டு ஊடுருவிப் பார்க்கும்போது
வேகமென்ற அட்சரத்தின் ஆட்டையல்லால்
என் மகனே மற்றதெல்லாம் ஸ்தூலங்காணே

Translation:
 Details about ashta karma
Seeing the yoga, the ashtanga yoga
The Superior one! Listen about ashta karma sitthu
The locus, the body, became the nine planets/ house of nine/the new house
Remaining at the origin, the blessed top
The part, the primary substratum (muladhara)
Holding it, if peered
The action of the letter, the speed
My son, the rest is gross (sthula)

Commentary:
Agatthiyar begins to describe the ashta karma siddhi.  They are the eight mystical accomplishments starting with vaseekaram or attraction towards oneself.  He says that when one performs ashtanga yoga the ashta siddhi occurs.  He says that the body became the nava graha.  This terms means nine planets, the new house as well as house of nine.  The cakras in the body are considered to be loci of the external planets.  They are nine including the rahu and ketu in the Indian astrological system.  Nava means new.  By performing the ashtanga yoga the yogin attains a new body, that of light.  Hence, it is a nava graha or a new house within which his soul resides.  Nava graha may also mean the house with nine thresholds, the nine apertures- mouth, ears, nose etc.  Planetary positions are said to confer certain benefits to the person.  In this context the status of the cakra grant the person certain effects that include the ashta karma siddhi.  Agatthiyar says that when one holds on to the muladhara and looks within one perceives that all the actions happening within the body and outside of it are all actions of the single letter, which may be the omkara or si.  That is the essence, the subtley that makes the rest, the sthula or gross entities function.


அஷ்ட கர்ம சித்தியைப் பற்றி இப்பாடலிலிருந்து கூறத் தொடங்குகிறார் அகத்தியர்.  அஷ்ட கர்ம சித்தி என்பவை வசீகரம் முதலாய எட்டு சித்திகள்.  இவற்றை ஒரு யோகி அஷ்டாங்க யோகப்பூர்த்தியில் பெறுகிறார்.  அவரது உடல் நவகிரகமாகிறது என்கிறார் அகத்தியர்.  இந்தச் சொல் ஒன்பது கோள்களையும் (ராகு, கேது உட்பட இந்திய வானவியல் குறிப்பிடும் ஒன்பது கிரகங்கள்), ஒன்பது சக்கரங்கள் அல்லது உணர்வு வாழும் இடங்களையும் ஒன்பது வாசலைக் கொண்ட உடலையும் குறிக்கிறது.  நவ என்பது புதிய என்ற பொருளையும் கொண்டது.  அஷ்டாங்க யோக சித்தி பெற்ற ஒரு யோகி ஒளியுடலைப் பெறுகிறார்.  இவ்வாறு அவர் புதிய உடலைப் பெறுகிறார்.  உடலில் நவகிரகங்கள் என்பது ஒன்பது சக்கரங்களுடன் தொடர்புடையது.  எவ்வாறு ஒருவரது ஜாதகத்தில் கோள்களின் நிலை பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவோ அதே போல் இந்த சக்கரங்களின் நிலையம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.  ஒன்பது வாசல் கொண்ட உடல் என்பது கண், காது, மூக்கு என்பது போன்ற ஒன்பது வாசல்களைக் குறிக்கிறது.  இந்த உடலில் ஒருவர் மூலாதாரத்தைப் பற்றிக்கொண்டு பார்த்தால் அனைத்தும் ஓரெழுத்தின் ஆட்டம் என்பதைக் காணலாம் என்கிறார் அகத்தியர்.  ஓரெழுத்து என்பது ஓம் அல்லது சி யாக இருக்கலாம்.  இதைத்தவிர மற்றதெல்லாம் ஸ்தூலம் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment