Friday, 16 October 2015

192. Agatthiyar begins to explain mantra vidya

Verse 192
பண்ணடா சிவபூசை சக்தி பூசை
பத்தியுடன் சித்தமதாய் வாலை பூசை
நண்ணப்பா பூரணமாய் பூசை யோகி
நாதாந்த சோதியடா யோக பூசை
பண்ணடா தவறாமல் பூசை செய்ய
கருமானஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு
விண்ணடா நிறைந்த மலர்க் கண்ணே சூக்ஷம்
வேதாந்த சூக்ஷமதை விரும்பிக் கேளே

Translation:
Perform son, siva puja sakthi puja
With devotion, as chittham, the valai puja
Seek the puja, the yogi, as fully complete
The yoga puja is nadhantha jyothi
Perform it without fail
I will tell you the magical way, listen carefully
The eye of the flower of the sky is the subtlty
Listen to the Vedanta sukshma, with interest.

Commentary:
Agatthiyar is starting to talk about the secret ways in which the worship ritual, kundalini yoga, should be performed.  He says that a yogi will perform Siva puja, sakthi puja, valai puja with chittham.  The goal of the worship is nadhantha jyothi.  This is supreme consciousness that remains beyond the nadha.  This is the paraparam. This is the terminus if veda or all knowledge.


ஒரு குண்டலினி யோகி செய்யும் பூசை நாதாந்த சோதி பூசை.  இதற்கு வழி சிவ பூசை, சக்தி பூசை, வாலை பூசை ஆகியவை வழிமுறைகள்.  இந்த நாதாந்த சோதி பூசை சித்தத்தால் செய்யப்படுகிறது.  அதற்கான வழிமுறை மந்திரமுறை.  கருமானம் என்பதற்கு மந்திர வித்தை என்று பொருள்.  இந்த வேதாந்த சூக்ஷத்தைத் தான் கூறப்போவதாக அகத்தியர் சொல்கிறார்.

No comments:

Post a Comment