Verse 195
ஆச்சப்பா திரேகமது சித்தியானால்
ஆதிசதா சிவசோதி அங்கே காணும்
மூச்சப்பா தன்னிலைவிட் டசையாதையா
முத்தியுள்ள சித்தமது கெட்டியாச்சு
பேச்சப்பா தானடங்கி மௌனமாச்சு
பேரண்டஞ் சுத்திவர கெவனமாச்சு
நீச்சப்பா தானறிந்து கெவுனத்தேகி
நிசமான வகாரமதைப் பூசை பண்ணே
Translation:
Son, if
superior body is attained
The origin,
the siva jyothi is seen there.
The breath,
will not move from its locus
The chittham
will become firm
Speech will
stop and silence will ensue
Kevana siddhi
of roaming around the supreme universes is attained
Knowing this,
riding on kevunam
Perform worship
of vakaara.
Commentary:
Attaining the
Vedanta deha mentioned in the previous verse is kaya siddhi. When this is attained the flame of
consciousness is experienced. The breath
will remain in kumbakam. Chittham or
consciousness will become firm. There is
no wavering of consciousness. Speech
stops and silence ensues. This is the
state of nadhantha the state beyond manifested sound. This is the state of pure sakthi which is
beyond vaikari, madhyama, pashyanthi. It
is the state of para, pure energy. This
state will make the yogin capable of astral travel. He will attain kevuna siddhi. With that he will be able to travel through
all the universes and the supreme space.
This is possible through vakaara which Agatthiyar explains later as
vaasi.
முந்தைய பாடலில் குறிப்பிட்ட வேதாந்த தேக சித்தி என்பது காய
சித்தியாகும். இந்த தேகம் எல்லா கட்டுப்பாடுகளையும்
கடந்தது, மலமற்றது. இதனை அடுத்து சிவசோதி
அல்லது ஒளியுருவமான சிவ தரிசனம், பரவுணர்வின் காட்சி கிடைக்கும். அடுத்து, மூச்சு உள்மூச்சு வெளிமூச்சு என்று
மாறிமாறிப் பாயாது தனது நிலையான கும்பகத்தில் நிற்கும். சித்தம் எனப்படும் உயருணர்வு அலைபாயாது
கெட்டிப்பட்டு விளங்கும். பேச்சு
நின்றுபோய் மௌன சித்தி கிட்டும். மௌன நிலை
என்பது வைகரி, மத்யமா, பஷ்யந்தி ஆகியவற்றைக் கடந்த பரா நிலை, சக்தி நிலை, நாத
நிலை. இந்த நிலையில் யோகி வானத்தில்
பறக்கக் கூடிய சித்தியான கெவுன சித்தியைப் பெறுகிறார். இந்த பயணம் உணர்வு நிலையில், சக்தி நிலையில்
நிகழ்கிறது. இந்த சக்தி நிலையே வகாரம்
அல்லது வாசி எனப்படுகிறது. வகாரம் என்றால்
வாசி என்று அகத்தியர் பின்வரும் பாடலில் விளக்கப்போகிறார்.
No comments:
Post a Comment