Verse 191
பண்ணப்பா பூசைவிதி தன்னைக் காணார்
பார்தனிலே அமைத்த விதிச் சித்துமாச்சு
நண்ணப்பா சித்தமுள்ள மதிதான் மைந்தா
நடுவான பீடமடா அண்டத்துச்சி
கண்ணப்பா தானிறைந்த உச்சி மீதில்
கமலமென்ற ஆயிரத்தின் இதழி னுள்ளே
முன்னப்பா அமிர்தமது கண்விண்டோடு
மூர்க்கமுடன் அந்தமிர்தம் பூசை பண்ணே
Translation:
Perform the
worship. Those who stipulated
The rules for
worship in the world do not see this, they became mystical accomplishments
Perceive son,
the moon (madhi) where chittham is present
The central
dais is the top of the universe (body)
With eyes
directed towards the tip of the universe (sahasrara)
Within the
thousand petals of the lotus
The nectar
will run down first
Perform
worship of the nectar with fury.
Commentary:
Agatthiyar
says that the kundalini yoga that he described above is true worship
ritual. All other rules that people have
stipulated as puja methods do not see this.
Their end goal then becomes mystical accomplishments. Siddhis are not the ultimate goal. They make a person lose the drive to seek the
ultimate. Many lose themselves in these
accomplishments.
Agatthiyar
says that the cental dais where madhi is present is the place where chittham
exists. Chittam represents the supreme consciousness in the limited state. It is the fourth in the modifications of the
mind- manas, buddhi, ahamkara and chittham.
Chittam in the unlimited state becomes chith or Supreme
consciousness. Thus, the sahasrara is
the threshold between limitedness and allpervasive state.
When the yogin
places his attention at the sahasrara, the thousand petal lotus the divine
nectar will start to ooze. Agatthiyar
says that one should seek this nectar with fury, great force.
மேற்கூறிய குண்டலினி யோகமே உண்மையான பூசை. அதன் வழிமுறையே சரியான பூசாவிதி. உலகில் எவ்வாறு பூசை செய்யவேண்டும் என்று
மக்கள் விதிகளை ஏற்படுத்தும்போது இதை உணராமல் விதிகளை அமைத்துள்ளனர் என்கிறார்
அகத்தியர். அதனால் அவர்களுக்குக்
கிட்டுவது சித்துக்கள் மட்டுமே. இவை உச்ச
இலக்கு அல்ல. அவற்றில் ஒருவர் தன்னை
இழந்து உச்ச நிலையைத் தொடத் தவறிவிடுவார்.
அதனால் ஒருவர் கவனமாக பூசையை, குண்டலினி யோகத்தை மேற்கொள்ள
வேண்டும்.
அவ்வாறு ஆக்னையைக் கடந்த ஒரு யோகி தனது கவனத்தை அண்டத்து
உச்சி எனப்படும் சகஸ்ராரத்தை நோக்கிச் செலுத்துகிறார். சகஸ்ராரமே சித்தம் இருக்கும் மதியின் பீடம்
என்கிறார் அகத்தியர். மதி என்பது
சந்திரனைக் குறித்தாலும் அது அறிவு என்றும் பொருள் படுகிறது. இங்கு அறிவு என்பது உயருணர்வு. அதுவே சித்தம். இவ்வாறு செய்யும்போது சகஸ்ராரத்திலிருந்து
அமிர்ந்தம் ஊறுகிறது என்கிறார் அகத்தியர்.
இந்த அமிர்த்தத்தைப் பெறுவதான பூசையை ஒருவர் மூர்க்கமாக முயலவேண்டும்
என்றும் அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment