Verse 186
ஓமென்றார் பிரணவமே ஆதிவஸ்து
உலகமெல்லாந் தானிறைந்த ஓமசத்தி
தாமென்ற சத்தியடா எங்குந்தானாய்ச்
சதாகோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று
ஆமென்று வாடினது ஓங்காரந்தான்
அடி முடியாய் நின்றதுவும் ஓங்காரந்தான்
நாதமென்ற ஓங்காரந் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகையும் பிறந்தவாரே
Translation:
The pranava,
the Om, is the Primal entity.
It is the
power of homa (fire oblation) that fills the entire world as itself,
It is the
power of the self, it remains everywhere are self.
Remaining as
the soul of countless mantras
It is omkara
that dances as aam.
It was omkara
that remained as the head and foot
In the Omkara
the nadha
The seven
types emerged.
Commentary:
Agatthiyar
says that everything emerged from Om. It
is the power of homa that fills the world as self. It is the soul of all the mantras. It is convention that unless the mantra is
recited with om it is not fruitful. Aam
is the active part of am or ang, the inactive form of the nadha brahman. It is the origin from which every
manifestation emerges. It is the
terminus where everything abides. The seven types of lifeforms are- devas,
humans, crawlers, aquatic, animals, birds and plants.
எல்லா உயிர்களும் ஓங்காரத்திலிருந்து தோன்றின. ஓங்காரமே உலகை நிறைக்கும் ஹோம சக்தி என்றும் அதுவே
எல்லா மந்திரங்களுக்கும் உயிராக இருப்பது என்றும் அகத்தியர் கூறுகிறார். ஓங்காரமே ஆம் என்று ஆடுகிறது என்கிறார்
அவர். ஆம் என்பது அங் அல்லது அம் என்னும்
இறைவனின் செயலற்ற நிலையின் செயல்பாட்டு நிலை.
சக்தி நிலை. இவ்வாறு ஓங்காரமே
வெளிப்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.
ஓங்காரத்திலிருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன, முடிவடைகின்றன. ஓங்காரத்திலிருந்தே ஏழுவகை உயிர்கள்
தோன்றுகின்றன என்கிறார் அகத்தியர். அவை
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், ஊர்வன, பறப்பன மற்றும்
நீரில் வாழ்வன என்பவை.
No comments:
Post a Comment