Verse 220
மோகனம்
காணவே வசிகரத்தின் மூலஞ் சொன்னேன்
கணக்கான மோகனத்தின் கருணை கேளு
பேணவே கீழ்த்திசையை நோக்கி மைந்தா
பிரணவத்தால் விபூதி உத்தளமாய்ப் பூசி
தோணவே புலியாசனம் மேற்கொண்டு
சுத்தமென்று துளசி மணி கையில் வாங்கிப்
பூணவே சபிப்பதற்கு மந்திரங் கேளு
பொருந்துமகா கணபதியின் சூக்ஷந்தானே
Translation:
Mohanam
I told you
about the origin of vasikaram so can see it.
Now hear about
mercy of mohanam
Son, facing
the east
Adorn the
sacred ash along with pranava
Sitting on a tiger skin
Take the
tulasi beads in hand
Listen about
the mantra that should be chanted
It is the
subtlety of Maha Ganapathy.
Commentary:
While vaseekaram is making things come to a person, come
under his control, mohanam is enchantment.
There is a subtle difference between them. Mohanam enhances vaseekaram. Depending on the nature of the object that is
desired the yogin practices vaseekaram alone or mohanam and vaseekaram. The ritual for mohanam is different from
vaseekaram. The yogin should face east
and sit in vyagra aasanam. Vyagrasanam may be tiger skin as the seat. He should
adorn sacred ash chanting pranava and hold the tulasi beads in hand. While Adi Ganapathy was the deity for
vaseekaram Maha Ganapathy is the deity for mohanam. Agatthiyar talks about the ashta Ganapathy or
eight Ganapathys in a later song.
வசீகரம் என்பது ஒரு பொருளைத் தன்னிடம் வரச்செய்வது, ஒரு
நிலை தனக்கு ஏற்படச் செய்வது, ஒன்றைத் தனது கட்டுக்குள் கொண்டுவருவது. மோகனம் என்பது ஒன்றைத் தன்னிடம் மயங்கச்
செய்வது. பொருட்களின் தன்மையைப் பொருத்து
ஒரு யோகி வசீகரத்தை மட்டும் அல்லது மோகனத்தையும் வசீகரத்தையும் சேர்த்துச்
செய்கிறார். மோகனத்துக்கான சடங்குகள் வசீகரத்தைவிட
வேறுபட்டவை. மோகனத்துக்கு ஒருவர் கிழக்கு
நோக்கி அமர்ந்து விபூதியை உத்தளமாகப் பிரணவத்துடன் பூசிக்கொள்ள வேண்டும். பிறகு புலி ஆசனம் அல்லது வியாக்கிர ஆசனத்தில்
அமர்ந்து கையில் துளசி மணிமாலையை எடுத்துக்கொள்ள வேண்டு என்கிறார் அகத்தியர். மோகனத்துக்கான தெய்வம் மகா கணபதி. பொன்னோரு பாடலில் அகத்தியர் அஷ்டமா சித்திகளுக்கான
அஷ்ட கணபதிகளைப் பற்றிக் கூறுகிறார்.
No comments:
Post a Comment