Verse 227
எண்ணியே ஆயிரத்தெண் ணுருவே செய்தால்
ஏகாந்த சத்திகண பதியினாலே
உன்னியே சாடனந்தான்மைந்தா மைந்தா
உறுதியுடன் சத்தியமா யாடும்பாரு
நண்ணியே சாடனமுஞ் சித்தியானால்
நாதாந்த புலத்தியனே சொல்லக் கேளு
நிண்ணிமையாய்க் கண்ட தெல்லா முச்சாடிக்கும்
நோக்குமனக் கண்ணதினாற் றன்னைபாரே
Translation:
If it is
recited thousand and eight times
Due to Ekantha
Sakthi Ganapathy
Son, son, the
ucchaadanam (uttering)
Will dance
firmly, see it.
If ucchaadana
siddhi is attained
Nadhantha
Pulaitthiya! Listen to me say it
All that is
perceived as hostile will be driven away.
See it with
mind’s eye, see it.
Commentary:
The mantra
mentioned in the previous verse, om, kili sau should be uttered 1008 times. Agatthiyar says that due to Ekantha Sakthi
Ganapathy’s grace all that which are hostile, unfriendly will be driven
away. As opposed to aakarshanam and
vaseekaranam ucchaadanam is to drive away the evil. While sthambanam arrests hostile forces this
karma drives them away. Agatthiyar calls Pulatthiyar
as nadhantha Pulathiya, one who has reached the nadhantha state. This makes us wonder if he is really describing
these concepts to Pulatthiyar or to us,, souls that are struggling to evolve.
முந்தைய பாடலில் கூறிய மந்திரமான ஓம் கிலி சவ் என்பதை
ஆயிரத்தெட்டு முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். அவ்வாறு செய்தால் ஏகாந்த சக்தி கணபதியின்
அருளால் தனக்கு எதிராக இருக்கும் சக்திகள் எல்லாம் விரட்டியடிக்கப்படும் என்று
அவர் கூறுகிறார். இதை மனக்கண்ணால்
பார்க்கும்படி அவர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
நாதாந்தப் புலத்தியர் என்று அவரை அழைப்பதன் மூலம் இப்பாடல் அவரை விட
நமக்காகத்தானோ என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment