Verse 232
வித்துவேஷணம்
பாரடா கிருசனத்தை சொன்னேன் மைந்தா
பதிவானவித் துவேஷணத்தைப் பகரக்கேளு
காரடா தென்மேற்கு முகமாய்க் கொண்டு
கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசிச்
சாரடா வெள்ளை வஸ் திரமேற்கொண்டு
சங்கையுடன்பவள மணி கையில் வாங்கி
நேரடா உச்சிட்ட கணபதியின் சூக்ஷம்
நேர்மையுடன் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளே
Translation
Vidveshanam
Son, I told
you about kirusanam (aakarshanam)
Now hear me
speak about vidveshanam
Facing the
south west
Adorn sacred
ash with mercy
Adorn white
cloth on top
Take the coral
bead chain
Listen to the
subtlety of ucchishta Ganapathy
I will tell
you truthfully, you hear carefully
Commentary:
Agatthiyar
starts to describe vidveshanam. In the
general sense it is said to create enemity between people. Here Agatthiyar gives a different
interpretation for this karma. He says
that the yogi should sit facing south west, adorn sacred ash, a white top cloth
and hold a chain made of coral beads.
The deity who grants this siddhi is ucchishta Ganapathy.
அகத்தியர் அடுத்து வித்வேஷணத்தை விளக்கத்
தொடங்குகிறார். பொதுவாக இந்த கர்மம்
மக்களிடையே துவேஷத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கர்மத்தின் உண்மையான நோக்கத்தை அகத்தியர்
இங்கு கூறுகிறார். முதலில் அதற்கான
சடங்குகளைக் கூறுகிறார். இதைச் செய்ய
விரும்பும் யோகி தென் மேற்கு திசையை நோக்கி அமர்ந்து வெள்ளை மேலாடையை அணிந்து
கையில் பவள மணியைக் கொள்ளவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். இந்த சித்திக்கு அதிபதி உச்சிஷ்ட கணபதி என்று
அவர் கூறுகிறார்.
No comments:
Post a Comment