Verse 246
அஷ்டாங்க யோகம்
வாளப்பா அஷ்டகர்ம சித்து சொன்னேன்
மகத்தான அஷ்டாங்க யோகங் கேளு
சூளப்பா யேமமொடு நேமாந் தானும்
ஆசனமும் பிராணாயம் பிரத்தியாகாரம்
காணடா தாரணையுந் தியானம் மைந்தா
கருணையுள்ள சமாதுடனே எட்டுமாச்சு
நூலடா தானறிந்து எட்டும் பார்த்தால்
நுடங்காமல் பூரணத்தில் நோக்கலாமே
Translation:
Ashtanga Yogam
Son, I told you about the ashta karma sitthu
Now hear about the glorious ashtanga yoga
It is yama, niyama
Asana, Pranaayam, pratthiyaahaaram
See son, dhaaranai and dhyanam
The merciful Samadhi, thus it is eight
If the eight are perceived
You can see the poornam.
Commentary:
Agatthiyar is beginning to describe the ashtanga yoga the
pinnacle of which yields ashta karma. He
lists them as yama, niyama, asana, pranayama, prathiyaharam, dharanai, dhyanam and
samdhi. He says in the end one can
experience the poornam or the Supreme Divine.
அஷ்ட கர்மத்தைக் கூறிய பிறகு அகத்தியர் அஷ்டாங்க யோகத்தைக்
கூறத் தொடங்குகிறார். அதன் எட்டு அங்கங்கள் யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம்,
தாரணை, தியானம் மற்றும் சமாதி என்பவை என்கிறார் அவர். இந்த யோகத்தின் முடிவில் பூரணம் எனப்படும்
இறைவனைக் காணலாம் என்றும் மேலும் கூறுகிறார்.
No comments:
Post a Comment