Saturday, 7 November 2015

223. Sthambanam- arresting the natural functioning

Verse 223
தம்பனம்
ஆச்சப்பா மோகனத்தின் அருமை சொன்னேன்
அரகரா தம்பனத்தின் அருமை கேளு
காச்சப்பா மேல்திசையை நோக்கி மைந்தா
கருணையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி
பேச்சப்பா தானிருந்து மவுனமாக
பெருமையுடன் தெர்ப்பை ஆசனமேற் கொண்டு
மூச்சப்பா தானிருத்தித் தாமரையின் மணியால்
மூர்க்கமுடன் செபிப்பதற்கு மந்திரங் கேளே

Translation:
Sthambanam/arresting the natural activity
I have told you the speciality of mohanam
Araharaa!  Listen about the glory of sthambanam
Son, sitting facing the West
Adorn the sacred ash
Remain silent
Over the seat of dharba grass
Arrest the breath, with the help of lotus beads
Listen to the mantra that should be chanted with fervor

Commentary:
Sthambanam is arresting natural processes like the flow of water, burning nature of fire etc.  Through this method the yogin is able to walk on water or over fire without drowing or being burnt.  When it is said that Hanuman’s tail, when lit, did not burn him is said in this respect only. To attain this siddhi Agatthiyar tells that a person should sit over a seat of dharba grass facing West.  He should adorn sacred ash and use lotus bead chain to count the mantra that should be recited vigorously.


ஸ்தம்பனம் என்பது பொருட்களின் இயற்கையான செயல்பாட்டை நிறுத்துவது.  யோகிகள் நீரின் மீது நடப்பது, நெருப்பின்மீது நடப்பது, கிடப்பது, அதைச் சுடாமல் இருக்கச் செய்வது போன்ற செயல்களை ஸ்தம்பனத்தினால் நிகழ்விக்கின்றனர்.  அனுமனின் வால் நெருப்பு வைத்தபோதும் அவரைச் சுடவில்லை என்று கூறுவது இந்தக் கருத்தில்தான்.  இந்த சித்தியை அடைய ஒரு யோகி மேற்கு திசையை நோக்கி தர்ப்பைப்புல்லினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து விபூதியை உத்தளமாகப் பூசி கையில் தாமரை மணியாலான செபமாலையை எடுக்கவேண்டும்.  அதனைக்கொண்டு மந்திரத்தை மூர்க்கமாக உச்சரிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment