Verse 231
பாரான பார்தனிலே வஷ்டகர்மம்
பத்தியுடன் செய்துவிளை யாடும்போது
வீரான கர்ப்பமெல்லாங் கிருசனத்தினாலே
விட்டகன்று போகுமடா விண்ணை நோக்கு
நேராக நோக்கு மனக்கண்ணால் நீயும்
நேர்மையுடன் குருபதியில் நின்றாயாகில்
பேரான வாலை கணபதியினாலே
பெருமையுடன் கிருசனத்தைப் பேணிப் பாரே
Translation:
In the world,
the ashta karam
When it is
performed with devotion and played
All the
births, due to kirusanam
Will leave,
son, see the sky
You see this
truthfully through the mind’s eye
If you remain
in the gurupathi
Due to Vaalai
Ganapathy
You will
nurture kirushanam gloriously and experience it.
Commentary:
Agatthiyar
reiterates the idea found in the previous verse. He says if aakarshanam is performed property
all the births will leave a person, that is, he will not have anymore
births. The yogi experiences the state
of space when he remains in the gurupathi or locus of guru. Agatthiyar tells Pulatthiyar to experience
this. Thus aakarshanam makes all the experiences due to the ascent of kundalini, possible.
முந்தைய பாடலில் கூறிய கருத்தை இப்பாடலில் மீண்டும்
வலியுறுத்துகிறார் அகத்தியர். ஒருவர்
ஆகர்ஷனத்தை முறையாகச் செய்தால் கர்ப்பங்கள் அல்லது பிறவிகள் அவரைவிட்டு ஓடும் என்றும்
அந்த யோக குருபத்தில் நின்று பார்த்தால் விண் அல்லது வெட்டவெளி எனப்படும் இறைநிலை
அவருக்குப் புலப்படும் என்றும் அகத்தியர் கூறுகிறார். இவ்வாறு ஆகர்ஷணத்தின் பயன்
கர்மங்களை அறுப்பது என்று அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment