Verse 242
அஷ்ட கணபதி மூலமந்திரம்
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
ஓமப்பா ஆதிகணபதிதானொன்று
உறுதியுள்ள மகாகணபதிதானொன்று
தாம்பா நடனகணபதி தானொன்று
சங்கையுள்ள சத்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க் கேளு
நன்மையுள்ள வாலகணபதிதானொன்றே
Translation:
Mulamantra of Ashta Ganapathy
Yes, son, remaining as the king of the eight direction
The beloved Pulathiya, listen to me say,
Yes son, one of them is Adhi Ganapathy
The firm Maha Ganapathy is another,
The Nadana Ganapathy is another
The Sakthi Ganapathy is another
I am tellin you listen to them
The beneficial Vaalai Ganapathy is another.
Commentary:
Agatthiyar lists the eight Ganapathys as Adhi Ganapathy,
Maha Ganapathy, Nadana Ganapathy, Sakthi Ganapathy, Vaalai Ganapathy and continues
the list in the next verse also.
Note: Adi Ganapathi- or the
original Ganapathay is also called nara mukha Ganapathy, one with human face. Temple for Adhi Ganapathy is found at
Thilatarpanapuri (http://templesoftamilnadu.co.in/tag/nara-mukha-vinayagar/). Siva is said to have replaced the face of
this original Ganapathi created by Parvathi with an elephant face.
அஷ்ட
கணபதிகளை இப்பாடலில் மீண்டும் பட்டியலிடுகிறார் அகத்தியர். அவர்கள் ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி
கணபதி, வாலை கணபதி என்று இந்தப் பட்டியலை அடுத்த பாடலிலும் தொடருகிறார் அவர்.
குறிப்பு: ஆதி கணபதி என்பவர் நரமுக கணபதி என்று அழைக்கப்படுகிறார். அவரது கோயில் திலதர்பணபுரி என்ற உள்ளது. மேலே கொடுக்கப்பட்ட லிங்கில் விவரங்களைப்
பெறவும்.
No comments:
Post a Comment