Verse 250
ஆசன விபரம்
அறிந்துபா ராசனங்கள் ஒன்பதையுங் கேளு
அப்பனே சொற்றிலங்கோ முகத்தினோடு
விரிந்துபார் பத்மமொடு வீரம் மைந்தா
விசையான சிங்கமொடு பத்திரமுமைந்தா
பரிந்து பார் முத்தமொடு மயுரமைந்தா
பதிவாக நின்ற சுகம் ஒன்பதாச்சு
வரிந்துநின்ற ஒன்பதையுநீ தன்னுட்கண்டு
வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரே
Translation:
Asana
Listen and see
details about nind types of asana
Son, along
with sthiram, gomukham
Expand it to
Padma, veeram, Son
Along with it
the singa, badram
Muktham,
mayuram, son
Sukam thus they are nine in number
Seeing the nine within you
You see the ashtanga yogam.
Commentary:
Agatthiyar mentions nine types of asana. They are sthiram or svasthikasanam, gomukham
or the cow pose, padmam,/padmasanam or lotus pose, veeram or warrior pose,
singaasanam or lion pose, bhadram or auspicious pose, mukhtham or liberation
pose, mayurm or peacock pose, sukham or more comfortable pose.
While these are generally considered as external poses
Agatthiyar says that one should see them inside. These poses produce certain states within.
They alter the flow of prana, the state of mind and other
factors within thus enabling performance of ashtanga yoga. Hence, Agatthiyar tells Pulathiyar to watch
the effects of these poses within.
இப்பாடலில் அகத்தியர் ஒன்பது வகை ஆசனங்களைக் கூறுகிறார்.
அவை திரம் அல்லது ஸ்திரம் எனப்படும் ஸ்வஸ்திகாசனம், கோமுகம் அல்லது மாட்டின் முகம்
போன்ற ஆசனம், பத்மம் அல்லது தாமரையைப் போன்ற நிலை, வீரம் அல்லது போர்வீரனைப் போன்ற
நிலை, சிங்காதனம் அல்லது சிங்கத்தைப் போன்ற நிலை, பத்ரம் அல்லது மங்களாசனம்,
முக்தம் அல்லது முடிவு ஆசனம் மற்றும் மயூரம் அல்லது மயிலாசனம் என்ற ஒன்பதுமாகும்.
இந்த ஆசான்களை உள்ளே பார்த்து அஷ்டாங்க யோகத்தைப்
பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
பொதுவாக ஆசனங்கள் என்பவை வெளியில் வைக்கும் உடல் நிலைகள். இப்போது உடற்பயிற்சியைப் போல செய்யும் இவற்றின்
உண்மையான நோக்கம் உள்ளே அவை ஏற்படுத்தும் நிலை.
இந்த ஆசனங்கள் உள்ளே பிராணனின் ஓட்டத்தையும் மனத்தையும் பிற வஸ்துக்களிலும்
ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்
அஷ்டாங்க யோகம் செய்வது ஏதுவாகிறது.
No comments:
Post a Comment