Verse 249
செப்புகிறேன் நியமவகை பத்து மக்காள்
சிவசிவா தவசோடு சந்தோஷந்தான்
ஒப்புகிறேன் ஆற்றி கஞ்சந் தானத்தோடு
உட்சிவ பூசையொடு சித்தாந்த சிரவணம்
அப்புகிறேன் சிவத்தோடு சிவமதிதான் மைந்தா
அருள்பெருகும் விரதமென்ற வகைதான் பத்துந்
துப்புரவாய்க் கண்டறிந்து சிவயோகத்தை
சுகமாக வகையுடனே யறிந்துபாரே
Translation:
People I will
tell you about the ten types of niyamam
Siva sivaa,
along with tapas, contentment
Along with
asthikam, dhaanam
Inner siva puja, sravanam of siddhantha
I will tell
you, along with Sivam, having sivam in the mind at all times
The merciful vratham are all the ten types
Knowing them
well, the Siva yogam
Know it with
all the types
Commentary:
Agatthiyar
lists the ten steps that constitute niyamam.
They are
Tapas-austere
life,
japa-
recitation of mantra,
aasthikam- realizing
that concepts such as God, karma, afterlife are all true,
santhosham or
happiness- contentment,
dhaanam-
philanthropy,
siva vrata- following
the prescriptions on days special for siva,
siddhantha
sravanam- hearing others explain siddhantha,
makam- performing
fire austerities,
siva puja-
performing worship rituals,
siva mathi-
having a mind engrossed in sivam at all times
நியமத்தின் பத்து படிகளை இங்கே அகத்தியர் விளக்குகிறார். அவை
தபஸ்- ஒழுக்கமான வாழ்க்கை,
ஜபம்- மந்திர உச்சாடனம்
ஆஸ்திகம்- கடவுள், கர்மம், மறுபிறவி போன்றவை உண்டு என்று
உணர்தல்
சந்தோசம்- மன திருப்தி
தானம்- கொடை
சிவ விரதம்- முக்கிய நாட்களில் செய்யவேண்டிய சடங்குகளைச்
செய்தல்
சித்தாந்த சிரவணம்-சித்தாந்தங்களை பிறர் விளக்க கேட்டல்
மகம்- தீ ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல்
சிவ பூஜை- லிங்க வழிபடல் முதலியவற்றைச் செய்தல்
சிவ மதி- மனத்தில் எப்போதும் சிவனையே நினைத்தல்
No comments:
Post a Comment