Verse 110
தானென்ற முப்பாழில் மும்மலமும் நீக்கித்
தற்பரத்துக் கப்பால் மயிர்ப்பாலமீதில்
வானென்ற நெருப்பாறுக்கு அப்பாற்சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கி
கோனென்ற வெளியொளியில் தானே தானாய்
குவிந்திருந்த சிவயோக ஞானந்தானாய்
ஊனென்ற வாதியந்தந் தானே தானாய்
உகந்திருப்பார்
சிவஞான முணர்ந்தோர்காணே
Translation:
Removing the
three innate impurities in the three voids (paazh)
Over the hair
bridge above the state of self
Going beyond
the river of fire, the sky
With the mind
abiding in the supreme space
In the king,
the efflugence of the space, as self
The siva yoga
jnana that is focused
As the state
of self at the terminus of the body, the vaadhi
Are those who
remain desiring it, those who realized sivajnana.
Commentary:
The three
innate impurities are egoity (aanava), doership (karma) and delusion
(maya). Paazh or void is like a region
or zone that separates each of these three impurities. Tirumular explains these three voids in
tantiram 8 section 27. Realizing the
gross body, subtle body, jnanendriya, karmendriya, anthakarana and prakriti as
different from the self helps the soul to cross the maya paazh or the void of
maya. Realizing that the seven vidya
tattva of kala, kaala, niyathi, raga etc as the causes for limitations helps
the soul cross the bodha paazh.
Realizing the nature of cause and effect or karya and karana leads to
crossing the upasantha paazh. When a
soul crosses these three voids, it remains in a pure state of knowledge. Agatthiyar calls this state as the state of
sivajnana yoga or association with siva jnana, a state free of any limitations. Hair bridge and river of fire are
symbolism to indicate the path of consciousness that reaches the supreme
state. The jnani remains as the
effulgence of the space, at the point where the body and limitations
terminate.
மும்மலங்கள் என்பவை ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றுமாகும்.
இந்த மூன்றையும் கடப்பதை மூன்று பாழ்களைக் கடப்பது என்கிறார் அகத்தியர். இந்த மூன்று பாழ்கள் மாயப்பாழ், போதப்பாழ்
உபசாந்தப் பாழ் என்பவை. தூல உடல், சூட்சும
உடல், கர்மேந்திரியம் ஞானேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகியவற்றைத்
தன்னைவிட்டு வேறாக உணருவது மாயப் பாழைக் கடப்பதாகும். ஏழு வித்தியா தத்துவங்களைக் கடப்பது
போதப்பாழைக் கடப்பது. ஒரு பிறவிக்குக்
காரணமாக இருப்பவை இந்த தத்துவங்கள்.
காரணங்களையும் காரியத்தையும் உணர்ந்து கடப்பது உபசாந்தப்பாழைக்
கடப்பதாகும். திருமூலர் தனது திருமந்திரம்
தந்திரம் எட்டில் இந்த முப்பாழைப் பற்றி விளக்கியுள்ளார். இந்த முப்பாழையும் கடக்கும் ஜீவன் மீண்டும்
பிறப்பதில்லை. ஏனெனில் பிறவியை ஏற்படுத்தும் காரணங்கள் அனைத்தும் அதைவிட்டு
விலகிவிடுகின்றன. அது சிவ ஞான யோக நிலையில், சிவ ஞானத்துடன் கூடிய நிலையில் இருக்கிறது.
மயிர்ப்பாலம், நெருப்பாறு என்பவை உயருணர்வு கடக்கும்
நிலைகளை உணர்த்தும் குறிப்புகள். இந்த
நிலையை அடைந்த ஞானி தூய வெளியின் ஒளியாய் இருக்கிறார், உடலின் அந்தம் அல்லது
முடிவு நிலையில் இருக்கிறார் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment