Wednesday, 24 June 2015

102. Chandrakala and suryakala

Verse 101
காணப்பா சந்திரகலை பதினாறாகும்
கருவான சூரிய கலை பனிரெண்டாகும்
பேணவே இருகதிரும் ஒன்றாய் நின்ற
பிலமான சூரியகலைப் பன்னிரண்டில்
தோணப்பா உடலுக்குள் நின்ற மிச்சஞ்
சொந்தமுடன் போனதெங்கே இருந்த தெங்கே
பூணப்பா இருந்த மிச்சம் நாலுந்தானும்
பொருந்திநின்ற பூரணமாய்க் கண்டு பாரே
Translation:
See son, the Chandra kala is sixteen
The essence Suryakala is twelve
When both the rays remain together
Out of the twelve of suryakala
That which remaine within the body
Where did it go and where did it remain
Consider son, the remaining four
As the fullycomplete, see it so.

Commentary:
Agatthiyar explains an important concept in pranayama here.  The breath that flow in throught the ida nadi is called the chandrakala.  Kala means measure.  Thus, it flows for sixteen measures.  The breath that flows through the pingala is surya kala.  It flows in for twelve measures.  When the Chandrakala and suryakala are in harmony out of the twelve measures of suryakala four measures circulate up in the skull, above the neck region and the eight through out the body.  Siddhas say that when the eight is joined to four then it is deathlessness.  Agatthiyar is talking about this four and eight here.  He says that no one knows where the four measures remains.  He tells Pulatthiyar that it is the fully complete, the Divine as it is the cause for divine experiences.  Joining the eight and four is yoga.


அகத்தியர் இப்பாடலில் பிராணாயாமத்தைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறார்.  இட நாடி வழியே பாயும் சுவாசம் சந்திரகலை எனப்படுகிறது.  கலை என்றால் அளவு என்று ஒரு பொருள்.  சந்திரகலை பதினாறு அளவுகள் ஓடுகிறது.  பிங்கலை நாடியில் பாயும் சுவாசம் சூரிய கலை எனப்படுகிறது.  இந்த சூரியகலை பன்னிரண்டு காலஅளவுகள் ஓடுகிறது.  இந்த இருகலைகளும் ஒன்றாக ஒத்திசையும்போது சூரிய கலையின் பன்னிரண்டு அளவுகளில் நான்கு அளவுகள் கழுத்துக்குமேல் தலை பிரதேசத்தில் சுழல்கிறது.  மீதி எட்டு உடலில் சுழல்கிறது.  இந்த நான்கு அளவுகளை பூரணமாகக் காணவேண்டும் என்று புலத்தியருக்கு அகத்தியர் கூறுகிறார்.  சித்த மார்க்கத்தில் இந்த எட்டோடு நான்கைக் கூட்டுவதே யோகம் எனப்படுகிறது.  

2 comments: