Verse 89
காணவே சத்திசிவம் அந்தமாகுங்
கருணைவளர் அந்தமதைக் கருதக் கேளு
பேணவே சிவமென்றாற் சத்தி மூலம்
பேரறிந்து வசிஎன்றால் வாசி மூலம்
பூணவே சத்தி சிவம் வாசியாகிப்
பொருந்தி நின்ற காரணத்தை யார்தான் காண்பார்
தோணவே குருமுறையாய்க் காணவேணுந்
தொடுகுறிபோல் காணுதற்கு வகையைக் கேளே
Translation:
To see, the
Sakthi and Sivam will end
Listen about
the terminus where mercy grows
When it is
said Sivam it is the origin of Sakthi
When it is
said vasi it is the origin of vaasi
Becoming
Sakthi Sivam vaasi
Who will see
the cause that remains fitting so?
It should be
seen through the method of guru
Listen to the
way to see it as if it is a sign that is pointing to it.
Commentary:
As we have
seen before, the terminus of Sakthi Sivam is the state of singularity. The first manifestation is the polarization of
existence and awareness- Sat-chith. This
is Sivam and Sakthi. Agatthiyar confirms
this by saying that Sivam is the origin of Sakthi, that is, Sakthi is the state
derived from Sivam. Similarly vasi is
the method of breathing where va is uttered during inhalation and si during
exhalation. This practice draws in the
life force. This is vaasi yogam. (The active part of va is vaa. Short letters
are Sivam and long letters are Sakthi).
The state of
singularity is the cause that remains as Sivam, Sakthi and vaasi. Hence, Agatthiyar wonders whether anyone will
be able to perceive this state of singularity.
One cannot as there is no distinction as seer, seen and the process of
seeing. This singular state is not
easily perceivable. Hence, Agatthiyar says that is should be shown by one’s
guru. Seeing it through the method of
guru also means that one should perceive this state after crossing the guru
state that Agatthiyar described before.
Agatthiyar tells Pulathiyar that he will explain how to see state of
singularity, that is, his explanation will be like a a sign that is pointing to
it.
நாம் முன்னம் பார்த்ததுபோல் சக்தி சிவத்தின் அந்தம் ஒருமை நிலை,
பரசிவ நிலை.
இதன் முதல் வெளிப்பாடு சத்-சித் அல்லது சிவம்-சக்தி. இதை அகத்தியரும் சக்தியின் மூலம் சிவம் என்று
கூறுவதன்மூலம் உறுதிப்படுத்துகிறார். அதேபோல்
வாசியின் மூலம் வசி. வாசி யோகம் என்பது
உள்மூச்சின்போது வ என்றும் வெளிமூச்சின்போது சி என்றும் உச்சரிப்பது. மேற்கூறியதுபோல் சிவம் சக்தி வாசி ஆகியவற்றின்
மூலம், ஆதி, ஒருமை நிலை, பரசிவ நிலை. அந்த
நிலையில் பார்க்கப்படும் பொருள், பார்க்கும் பொருள், பார்ப்பது என்ற செயல் ஆகிய
மூன்றும் தனித்தனியாக இருப்பதில்லை. இந்த நிலையை ஒரு தன் முயற்சியால் மட்டும்
பார்க்கமுடியாது. அதனால் அகத்தியர் இந்த
நிலையை ஒருவர் குருமுறையாய்க் காணவேண்டும் என்று கூறுகிறார். குருமுறை என்பது குருவின் வழி என்று குரு
சக்கரத்தின் வழியில் சென்று காணவேண்டும் என்கிறார். தான் இந்த நிலையை ஒரு தொடுகுறி அல்லது இதுதான்
என்று காட்டும் கைக்காட்டி போல் கூறுகிறேன் என்று அகத்தியர் புலத்தியரிடம்
கூறுகிறார்.
No comments:
Post a Comment