Sunday, 28 June 2015

104. Jnana

Verse 104
பாரப்பா யோகவழி நன்றாய்ச் சொன்னேன்
பதிவான ஞானவழி பகரக் கேளு
காரப்பா ஆதார மூலந் தன்னிற்
கனிவான அக்கினிதான் ஆவிதன்னை
சேரப்பா முக்கோணச் சுடரில் நின்று
திருவாசியான தொரு செங்கண் மேவி
சாரப்பா அந்தமனைச் சொந்தமென்று
சங்கையுடன் தானிருந்து தன்னைக் காணே

Translation:
See son, I talked about the path of yoga, elaborately
Now listen about the path of wisdom (jnana)
In the adhara mula (muladhara)
The merciful fire, the spirit,
Join it, by remaining in the flame of the triangle
By pervading the beautiful eye, the decorative circumference (thiruvaasi)
Associate with it considering the house to belong to you
Remaining with focus see the self.

Commentary:
Agatthiyar says that jnana or wisdom is associating with the fire of kundalini with the knowledge that it is the spirit.  He says that this is performed by remaining in the flame of triangle which refers to the ajna cakra.  Thiruvaasi is the decorative circumference within which is depicted the deity.  The Saiva siddhantha work, “unmai vilakkam” calls the omkara as the thiruvaasi.  Here Agatthiyar calls the third eye or the eye of discrimination as the thiruvaasi as it encompasses the flame, the Divine within it.  The house mentioned here is the ajna.


ஞானம் என்றால் என்ன என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். ஞானம் என்பது ஆதார மூலத்தில் உள்ள அக்னியை ஆத்மா என்று அறிந்து முக்கோணம் எனப்படும் ஆக்னையில் அதனுடன் கூடுவது.  ஆக்னையில் உள்ள அக்னிக்கு வாசி, செங்கண் என்கிறார்.  இங்கு கண் என்று கூறப்படுவது மூன்றாம் கண், வீடு எனப்படுவது ஆக்ஞை.

உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூலில் நடராஜரின் திருவாசி ஓம்காரம் என்று கூறப்படுகிறது. திருவாசியினுள் இறைவன் நடமாடுவது என்பது சொல்லும் பொருளும் சேர்ந்திருப்பதைக் காட்டுகிறது. இங்கு அகத்தியர் குண்டலினி அக்னிக்கு, ஆக்னையில் காணப்படும் ஆத்மாவுக்கு வாசி மூன்றாம் கண் என்கிறார்.           

No comments:

Post a Comment