Verse 100
தானென்ற கிரியை வழி சொன்னேன் மைந்தா
தன்மையுடன் யோகவழி சாற்றக் கேளு
கானென்ற இருகதிருஞ் சுழியிலேற்றி
குறியான நவகிரகந்த தன்னைக் கண்டு
வானென்ற அனுக்கிரகத்துள்ளே சென்று
மகத்தான சிதம்பரத்துக் கப்பால் நின்று
தேனென்ற கமலமலர்ப் பொய்கை தன்னில்
திருவான பொய்கையில் நீராடிக்காணே
Translation:
I told you
about the path of kriya, Son.
Listen to the
path of yoga.
Raising the
two rays in the whorl
Seeing the
nine planets, the sign
Going within
the space, the blessing
Standing
beyond the glorious chitambaram
In the honey
like pond of lotus flowers
See it by
bathing in the pond the sacred one.
Commentary:
Agatthiyar
spoke about charya first as the worship ritual with the flower of vaasi at the
Sivalaya or the energy centers, the cakra and the rivers, the nadi. Next he talked about kriya which is experiencing
the union of Sakti and Siva at the energy centers and nadi. Now he begins his description of yoga, the
third limb of the four part pathway for realization. Yoga is rasing the two rays, that of the sun
and the moon, in the ida and pingala nadi, experiencing the nine planets that
signs for different principles, going to the space of consciousness or chith
ambaram, reaching the manasa sarovar or the region near the sahasrara and
experiencing it.
Please refer
to Agatthiyar meijnana kaviyam verse 117 for details on how the planets relate
to the various cakras in the human body and the principles they represent. Hence, Agatthiyar calls them as signs in this
verse. The space of consciousness is
chith ambaram. The manasa sarovar is the
lake of the mind or an expanded state of consciousness. The lake we see in Himalayas is an external
representation of this internal lake.
Agatthiyar calls it the pond with lotus flowers.
The yoga means joining.
True yoga is where the limited consciousness reaches or joins its
expanded state.
சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு படிகளைக் கொண்ட பாதையில்
முதலில் சரியை என்றால் என்று அகத்தியர் விளக்கினார். நாடிகளான நதிகளில் மூழ்கி சிவாலயங்கள்
எனப்படும் சக்தி நிலைகளை அடைந்து அங்கு வாசி எனப்படும் உயிர்ச்சக்தியை
சமர்ப்பிப்பதே சரியை என்பது. கிரியை
என்பது சிவசக்தி ஐக்கியத்தை எல்லா சக்தி மையங்களிலும் உணருவது. இதனை அடுத்த படியான யோகத்தைப் பற்றி இப்பாடல்
பேசுகிறது. யோகம் என்பது இரு கதிர்களை
சுழிக்கு ஏற்றி நவகிரகங்கள் என்னும் குறியை அறிந்து வெளியான சிதம்பரத்தைக் கடந்து
தாமரைகள் உள்ள நீர்நிலையில் மூழ்குவது என்று விளக்குகிறார் அகத்தியர். இரு கதிர்கள் என்பது சூரிய சந்திரர்கள். இடை பிங்கலை நாடியில் ஓடும் மூச்சு சந்திர
சூரியர்களாவர். அவற்றை சுழிக்கு ஏற்றுவது
என்பது சக்கரங்களின் ஊடே அவற்றைப் பாயச் செய்து ஆக்ஞையை அடைவது. நவக்கிரகங்களுக்கும் சக்கரங்களுக்கும் உள்ள
தொடர்பு அகத்தியர் மெய்ஞ்ஞானம் பாடல் 117 ல் விளக்கப்பட்டது. நவகிரங்கள் நமது
உடலில் பல தத்துவங்களின் குறியீடுகளாகக் காட்டப்படுகின்றன.அதனால் அவற்றை அகத்தியர்
குறிகள் என்கிறார். இவ்வாறு சிதம்பரம்
எனப்படும் உணர்வு வெளியைக் கடந்து ஏரியாக உருவகப்படுத்தப்படும் உணர்வின் விரிவை
அனுபவிப்பதே மானச சரோவர் ஏரியில் குர்லிப்பது என்று சித்தர்கள் கூறுவர். இதையே அகத்தியர் இங்கே குறிக்கிறார். இதுதான் உண்மையான யோகம்.
யோகம் என்ற சொல் சேர்வது என்று பொருள்படும். இங்கு அளவுக்குட்பட்ட உணர்வு நிலை அதன்
விரிவுடன் சேருவதே உண்மையான யோகம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment