Verse 93
தானென்ற திருக்கோவில் நதிகள் நல்ல
சங்கையுள்ள வேதமுதல் சாஸ்திரங்கள்
ஊனென்ற மனுப் பிறந்து செய்த மாய்கை
உறுதியுள்ள அம்மாய்கை அறிந்து தள்ள
வானென்ற நாத விந்து செயலறிந்து
மார்க்கமுள்ள மெய்ஞ்ஞானத் தலைவரெல்லாங்
கோனென்ற கேசரியைப் பூசை பண்ணிக்
குறியறியான சரியை வழிக் கூர்ந்தோர் தானே
Translation:
The sacred
temple of Self, the good rivers
The sastras
including Veda
The maya that
manu, the body created
Realizing that
strong maya and pushing it away
Knowing the
action of nadha bindhu the space
For the
leaders of the path of meijnana (true wisdom)
Worshiping the
king, kechari
Are those who
are following the path of charya.
Commentary:
Agatthiyar
described the location of the temples and sacred rivers in the body. Then he described true charya, that it is
entering the nadi, reaching the cakras within and performing worship
rituals. In this verse he describes the
entity for which the puja ritual is performed.
The Divinity
that is worshiped in the cakras is “kechari”.
We have already seen what kechari means (verse 5 and 87), that it the
entity that roams in space, consciousness.
As it is true with any worship this worship should also be performed
with true understanding. One should be
aware of the sacred loci within the body, the nadi or the rivers, the knowledge
systems including the Vedas and sastras, the maya which creates the body-the
manu, the strong influence of maya, the nature of nadha and bindhu and how to
get rid of maya.
Without these
the worship will not be fruitful as it is not performed with awareness. Those in the path of true wisdom or meijnana
will follow this method. According to
Agatthiyar this is the path of charya.
வெளிஒழுக்கமான சரியை என்பது கோயிலில் வழிபடுவது
தீர்த்தங்களில் ஆடுவது என்னும்போது அந்தக் கோயில்களும் தீர்த்தங்களும் எங்கு உள்ளன
என்று அகத்தியர் முதலில் கூறினார். அதன்
பிறகு அந்தக் கோயில்களுக்கு எவ்வாறு செல்வது என்று கூறினார். நாடிகள் என்னும் நதிகளில் மூழ்கி தாமரை மலரைப்
போன்ற சக்கரங்களான சிவாலயங்களில் பூஜை செய்வதே சரியை என்று கூறியபிறகு அந்த ஆலயத்தில் உள்ள இறைவன் யார் இப்பாடலில் கூறுகிறார் அகத்தியர். இக்கோயில் உள்ள இறைவன் கேசரி, அதாவது க என்னும்
வெளியில் சஞ்சரிக்கும் விழிப்புணர்வு.
கேசரி என்றால் என்ன என்று பாடல்கள் 5 மற்றும் 87 ல் பார்த்தோம்.
எந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய முயன்றாலும்
அதற்குமுன் தன்னை அதற்கு ஏற்றவாறு தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம், வழிபாட்டை
சரியான மனநிலையில் செய்வது முக்கியம். கேசரி பூஜையும் அவ்வாறு செய்யப்படவேண்டிய
ஒன்று. அதற்கு எவ்வாறு தன்னைத்
தயார்ப்படுத்திக்கொள்வது என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். கோயில்கள் எவை நதிகள் எவை என்று ஒருவர்
அறியவேண்டும், சாத்திரங்கள் வேதங்கள்
ஆகியவற்றை அறியவேண்டும், மாயையால் தோற்றுவிக்கப்பட்ட இந்த உடல் எனும் மனுவையும்
மாயை எவ்வளவு உறுதியானது என்பதையும் அதை எவ்வாறு விலக்குவது என்பதையும்
அறிந்துகொள்ள வேண்டும் முடிவில் நாத பிந்துவின் செயல்பாட்டை அறிந்துகொள்ளவேண்டும்
என்று பட்டியலிடுகிறார் அகத்தியர்.
இவ்வாறு சரியான பாவத்துடன் பூஜை செய்யவேண்டும் என்கிறார்
அகத்தியர். மெய்ஞ்ஞானப் பாதையில் செல்பவர்கள்
இவ்வாறுதான் செய்வார்கள், இதுவே சரியை மார்க்கம் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment