Verse 108
தானென்ற சரியை முதல் ஞானஞ்சொன்னேன்
சமரசமாய்க் கண்டறிந்து தன்னைப் பாரு
ஊனென்ற உடலுயிர்க் கண்டாயானால்
உண்மையென்ன சரியை முதல் ஞானந் தோன்றுங்
கோனென்ற குருவருளால் மைந்தா நீயுங்
குறிப்பறிந்து ஞான நிலை கூர்ந்துப் பார்க்க
வானேற சரியை முதல் ஞான மட்டும்
மார்க்கமுட நன்றாகச் சூக்ஷங்கேளே
Translation:
From charya to
jnana, I revealed,
See the self
knowing it as samarasa
If you see the soul and the body
From charya to
jnana will occur as truth
By the grace
of guru, son,
To look with
focus the state of jnana carefully
To climb the
sky from charya up to jnana
Listen about
the subtlety, in the proper way.
Commentary:
Among the four
steps, charya, kriya, yoga and jnana the first three occur due to the yogin’s
effort. Jnana, on the other hand, occurs
as a consequence of the first three steps.
Jnana is a state. Samadhi that is
attained during yoga gives a glimpse of this jnana state. Hence, it was mentioned before that Samadhi
is not a permanent state. There is the
distinction of the knower and known. In
the jnana state the yogin becomes that state.
He experiences being that state, being the five doers, Siva, Sakthi, the
seven worlds etc. This occurs due to
guru’s grace. However this state is also
not a permanent state as the yogin has not crossed the restrictions of the
body. He experiences being in the all
pervasive state while still remaining in the body. The soul and body mentioned here refers to akara and ukara. Akara the letter which stands for Siva represents the soul and ukara the letter that stands for Sakthi represents the body.
சரியை, கிரியை, யோகம் ஞானம் என்னும் நான்கு படி வழிமுறையில்
முதல் மூன்று ஒரு யோகியின் முயற்சியால் செய்யப்படுபவை. ஞானம் என்பது அவ்வாறல்ல. அது முதல் மூன்று
படிகளின் விளைவாக ஏற்படுவது. யோகத்தில்
உள்ள சமாதி நிலை இந்த ஞான நிலையின் ஒரு துளியைத்தான் காட்டுகிறது. சமாதியில் அனுபவிப்பவர் அனுபவிக்கப்படும் நிலை
என்ற வித்தியாசங்கள் உள்ளன. ஞான நிலையில்
அந்த யோகி எவ்வாறு தான் அந்த நிலையாகவே இருப்பது என்பதை உணருகிறார். இங்கு மேற்கூறிய இருமை நிலை இல்லை. ஆனால் இங்கும் அந்த யோகி உடலின் கட்டுத்தளையைக்
கடக்கவில்லை. உடலில் இருந்துகொண்டே அந்த
உடலற்ற நிலையை அன்பவிக்கிறார். இப்பாடலில் குறிப்பிடப்படும் ஊனென்ற உடலுயிர் என்பது அகார உகாரத்தைக் குறிக்கும். அகாரம் சிவனையும் உயிரையும் குறிக்கும். உகாரம் சக்தியையும் உடலையும் குறிக்கும்.
இந்த நிலை குருவின் அருளால் ஏற்படுவது. இதை எவ்வாறு அடைவது என்று இன்னும் விளக்கமாக
அடுத்த பாடலில் அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment