Verse 109
கேளப்பா அயன்மாலின் திரையறுத்து
கிருபையுள்ள ருத்திரன் தன் திரையை நீக்கி
ஆளப்பா மயேசுரன்தன் திரையைத் தள்ளி
அதன் மேலே சதாசிவன்தான் திரையைக் கட்டு
சூளப்பா ஐம்புலனைச் சுட்டுத் தள்ளிச்
சுக சீவப் பிராணமயத் தோடிருந்து
காலப்பா செவி விழியுங் கடந்தப்பாலே
கருணையுடன் தானிருப்பார் ஞானிதானே
Translation:
Listen son,
cutting the screen of Brahma and Vishnu
Removing the
screen of merciful Rudra
Push the
screen of Maheswara and rule
Tie up the
screen of Sadasiva that is above it
Burning away
the five senses, take pledge
Remaining with
the blissful, embodiment of jiva prana,
Beyond the eye
and the ear
They will
remain mercifully as prana, the jnani.
Commentary:
We saw in the
previous verse that jnana is a state attained by a yogin as a consequence of
charya kriya and yoga. These three steps
help the yogin to cross several principles represented by thr deities, Brahma,
Vishnu, Rudra etc. In this verse
Agatthiyar equates these limiting principles to screens. He tells Pulatthiyar to cut away one screen
at a time and reach the state above Sadasiva.
The limitations caused by the senses are also removed and the soul
remains as Jivapranamaya. Such souls are
the jnani or saints who remain beyond sensual distractions of ears and eyes. He remains in a state where he
gathers knowledge without the interference of the senses.
சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று நிலைகளையும் கடக்கும்போது
ஏற்படுவது ஞான நிலை என்று முன்னம் பார்த்தோம்.
இந்த மூன்று படிகளும் ஒரு யோகியை பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகியவர்களால்
குறிக்கப்படும் தத்துவங்களைக் கடக்க உதவுகின்றன.
இந்த தளைகளை அகத்தியர் திரைகள் என்கிறார்.
இந்த திரைகளை ஒவ்வொன்றாக அறுத்தெறிந்து சதாசிவனையையும் கடந்து ஒரு யோகி
முன்னேற வேண்டும். ஐம்புலன்களின்
தாக்கத்தைக் கடந்து ஜீவ பிராணமயமான நிலையை அடையவேண்டும். அந்த நிலையில் அந்த ஞானி கண் காது என்ற
புலன்களைக் கடந்து இருக்கிறார், அதாவது புலன்களின் உதவியில்லாமலேயே அனைத்தையும்
அறியும் திறம் பெற்று இருக்கிறார்.
No comments:
Post a Comment