Tuesday, 2 June 2015

80. Siva Sookshma

Verse 80
சோதிமய மானசிவ சூக்ஷங் கண்டால்
சுக சீவப் பிராணனது அகலாதையா
ஆதியிலே முச்சுடராய் நின்ற சூக்ஷம்
ஆரறிய போரார்கள் அறிவானந்தம்
நீதியுடன் அறிவான போதம் பெற்று
நிசமான முச்சுடரைக் கண்டாயானால்
ஓதியதோர் மந்திரகளை வாசியலே
உண்மைஎன்ற மந்திரங்கள் எல்லாஞ் சித்தே

Translation:
If the subtlty of the Siva, the embodiment of effulgence is seen
The lifebreath of the soul (jiva prana) will remain comfortably without leaving
The subtlty that remained in the beginning as the triple flames
Who will know about it, consciousness and bliss.
Attaining the right knowledge (bodham)
If you see the true triple flame
All the mantra recited through vaasi
All those true mantra will become fruitful.

Commentary:
When a yogin embarks on the kundalini dhyanam he will experience the atma jyothi which is seen at the ajna cakra.  Through breath regulation the life force is drawn in and this flame is transformed into the vision of the Divine, the siva darisanam.  In this state the prana will not leave the body.  The yogi will be in a state of kumbaka.  Agatthiyar says that the flame experienced during this meditation is the chith and anandha of the sath that remains as the triple flame.  To realize this sat chith ananda one should have the bodham or “arivu” the chith.  When one remains in this state and recites mantra through vaasi ro life force then all the mantra will become fruitful. This is called mantra siddhi.


குண்டலினி தியானத்தை மேற்கொள்ளும் ஓர் யோகி முதலில் ஆத்ம ஜோதியைத் தரிசிப்பார்.  ஆக்ஞையில் காணப்படும் இந்த ஜோதி உள்ளே மூச்சுடன் இழுக்கப்படும் உயிர்ச்சக்தியால் வலுவூட்டப்பட்டு சிவஜோதியாகக் காட்சியளிக்கும்.  இந்த நிலையில் பிராணன் உடலை விட்டு நீங்காது, அதாவது அந்த யோகி கும்பக நிலையில் இருப்பார்.  இந்த ஜோதி சிவ சூட்சுமம் என்று கூறும் அகத்தியர் இதுவே சித் ஆனந்தம் என்றும் இதுவே முச்சுடர் என்றும் கூறுகிறார்.  இந்த நிலையில் வாசி அல்லது உயிர்ச்சக்தியில் நின்று மந்திரத்தை செபித்தால் உண்மையான மந்திரங்கள் அனைத்தும் சித்தியாகும் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment