Verse 106
சோதி என்ற ஐந்தெழுத்துந் தான்தானாகித்
துலங்குகின்ற சதானந்தம் தான்தானாகி
ஆதியென்ற மூன்றெழுத்தும் தான்தானாகி
அடங்கியொன்றாய்
நின்ற பொருள் தான் தானாகி
சாதியென்ற சமரசமும் தான் தானாகிச்
சதரகோடி மந்திரமுந் தான் தானாகி
வேதிஎன்ற கெவுனமுதல் அஷ்டசித்தும்
செப்பாத மவுனமதும் தான்தானாமே
Translation:
The self becoming
the effulgence, the five letters
The self
becoming the sadanandham
The self
becoming the three letters
The self
becoming the entity that abides into oneness
The self
becoming the equivalent of the distinctions
The self
becoming the countless mantra
The alchemy of
gevunam and the eight siddhis
The self
becoming the unspeaking silence.
Commentary:
Agatthiyar
describes the state that the yogi attains when he reaches the jnana step. The
soul or the limited self slowly loses its limited state and becomes various
unlimited principles. Agatthiyar says
that the soul becomes the effulgence, the five letters namasivaya, the eternal
bliss, the three letters of a, u and ma, and all the principles abiding within the
singular state
Samarasa is
becoming the same essence, sama+rasa,
without any distinctions. The
self also becomes countless mantra, alchemy and the eight siddhis of anima,
mahima, lagima etc and the supreme silence.
ஞான நிலையை அடைந்த யோகி அனுபவிக்கும் ஒருமை நிலையை
அகத்தியர் இப்பாடலில் விளக்குகிறார். தான்
என்னும் ஆத்மா மெதுவாக தனது அளவுக்குட்பட்டமையை விலக்கி அனைத்துமாகி நிற்கும்
நிலையை அடைகிறது. அது சோதியாக,
ஐந்தெழுத்தான நமசிவாயவாக, மூன்று எழுத்தான அ,உ ம வாக, இவையனைத்தும் அடங்கியிருக்கும்
நிலையாக, ஜீவன் ஈஸ்வரன் என்ற சாதிகள் மறைந்து சமரசநிலையாக, அனைத்து மந்திரங்களாக,
கெவுனமான ரசவித்தையாக, அணிமா, லகிமா முதலிய எட்டு சித்திகளாக பேசாத மவுனமாக
நிற்கிறது.
No comments:
Post a Comment