Sunday, 28 June 2015

105. The poorna is paripurna.

Verse 105
காணப்பா மேல்வெளியைக் கண்டு கூடி
கருணையுடன் அவ்வெளியைக் கண்டு கூடி
பூணப்பா நிராதாரச் சித்தமாகிப்
பூரணமாய் நின்ற பரி பூரணமேயாகி
தோணப்பா சிவன் அயன்மால் பூசைசெய்து
துடங்கி நின்ற தீவினைகள் ஒன்றுமற்று
பேணப்பா ருசியற்று ஆசையற்று
பேரண்ட சோதியுட சோதிதானே

Translation:
See the space on the top and merge with it
Seeing that space with mercy and merging with it
Adorn it with the chittam becoming unsupported (niradhara)
Becoming the fully complete that remained as the complete (soul)
Worshipping Siva, Brahma and Vishnu
Clearing all the evil karma completely
Nurture it, without taste or desire
It is the flame of the the effulgence of the supreme space.

Commentary:
In the previous verse Agatthiyar described the step of jnana or realization as merging with the flame of kundalini with the knowledge that it is nothing but the soul.  In this verse he is expanding it further by stating that the chittham or consciousness is in the unsupported state, that is, it is beyond the ajna.  The soul attains the state of the Divine, the paripurna or fully complete.  This happens by eradicating all the “vinai” or fruits of karma.  Agathiyar says that one should pray to Siva, Brahma and Vishnu for the same.  These deities are principles that represent the muladhara, svadishtana and manipuraka that cause a specific birth.  Besides cutting away the cause for this birth, the yogin has to let go of desires and interests also as these lead to new samskara and thus karma that would cause further births.  He adds further that the “atma jyothi” or the flame of the soul is none other than the “param jyothi” or the supreme flame of the Divine who is also represented by the supreme space.

முந்தைய பாடலில் அகத்தியர் ஞானம் என்றால் குண்டலினி அக்னியை ஆவி என்று உணர்ந்து அதனுடன் ஆக்னையில் கூட வேண்டும் என்று கூறினார்.  இப்பாடலில் அதை மேலும் விளக்குகிறார்.  நிராதார சித்தம் என்பது உயருணர்வு எவ்வித ஆதாரமும் இல்லாமல் இருப்பது.  இந்த நிலை ஆக்ஞையைக் கடந்த நிலை.  அண்டவெளி என்பது உடலுள் இருப்பது. பேரண்ட வெளி என்பது உடலைக் கடந்தது. 


பரிபூரணமே பூரணமாக இருப்பது என்று இங்கு அகத்தியர் கூறுகிறார். பூரணம் என்பது ஆன்மாவைக் குறிக்கும்.  இது மலம் கடந்த நிலை.  பரிபூரணம் என்பது இறைமையைக் குறிக்கும்.  இவ்வாறு ஆத்மாவே பரமாத்மா என்ற அத்வைத கொள்கையை இங்கே அகத்தியர் கூறுகிறார். இந்த ஆத்மா பரமாத்மாவாக தனது தீவினைகளைக் களைய வேண்டும்.  அதற்கு சிவன், பிரம்மா மற்றும் மாலைப் பூசிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இந்தத் தெய்வங்கள் மூலாதாரம், சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரக சக்கரங்களின் அதிபதிகள், பிறப்பை ஏற்படுத்தும் தத்துவங்களைக் குறிப்பவை.  இது மட்டுமல்ல அந்த யோகி ருசியையும் ஆசையையும் அறுக்கவேண்டும் என்கிறார் அகத்தியர் ஏனெனில் அவை புதிய கர்மங்களைத் தோற்றுவித்து மீண்டும் பிறப்பை ஏற்படச்செய்யும். இவ்வாறு செய்தால் ஆத்ம ஜோதி, பரஞ்சோதியாகும் ஏனெனில் அது பேரண்ட சோதியின் சோதியே என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment