Verse 81
சித்தான முச்சுடரின் தியானஞ் சொன்னேன்
சிவாய குரு சண்முகனார் தீர்க்கத்தாலே
பத்தான தச தீக்ஷை முத்தி பெற்றுப்
பரமகுரு சண்முகனார் தியானங் கேளு
வித்தான சூக்ஷமடா சற்றோ இல்லை
வேத முடிவானதொரு விஞ்சை மூலஞ்
சத்தான விஞ்சையடா சொல்லக் கேளு
சங்கையுடன் ஓம் கிலி சிம் என்று ஓதே
Translation:
I told you
about the chith, the dhyana of the triple flames
Due to the
grace of Sivaaya guru Sanmukha
Attaining the
ten, the dasa deeksha
Listen about
the dhyana of Paramaguru, Shanmukan
It is the
subtlety which is the seed
The origin of
the knowledge which is the pinnacle of the terminus of Veda
The knowledge
about the sath (the essence) listen to me say it
Recite om kili
sim
Commentary:
Agattiyar is
next talking about Shanmukha dhyana. The
term Shanmukha generally refers to Lord Muruga who is depicted with six
faces. This term also refers to the mani
or jewel that a yogi sees at the ajna.
It is said to have six faces. The
term “sivaaya guru shanmuganaar” seems to indicate Lord Muruga who is said to
have taken the role of a guru to his father Siva. If sivaaya is explained as supreme
consciousness then guru is the one who removes the darkness, the ignorance,
that conceals it and it is the mani with six faces experienced at the
ajna. This experience occurs at the
conclusion of ten initiations that are given at stages in an ascending
order. These are called dasa
deeksha. These initiations transform the
body and the mind. Agatthiyar, in his
paripoorna sutram 420, explains ten initiations for Siva and ten for
Sakthi. The dasa deeksha also refers to
the ten states that a human body goes through until it reaches the state of
divya deha or the body of light.
Agatthiyar mentions that the knowledge about this is supremely subtle. It is the superb knowledge that occurs at the
terminus or pinnacle of all that should be learned, Veda. To reach this stage Agatthiyar recommends the
mantra om kili sim.
சண்முக தியானத்தைப் பற்றி அடுத்து பேசுகிறார்
அகத்தியர். சண்முகம் என்பது பொதுவாக
முருகப்பெருமானையே குறிக்கும். குண்டலினி
யோகத்தின்போது யோகி ஆக்ஞையில் தரிசிக்கும் மணியும் ஆறு முகங்களையுடையது. அதனால் இந்தத் தியானம் ஆக்ஞையில் பெறும் ஒரு
அனுபவத்தைக் குறித்தும் இருக்கலாம். அகத்தியர்
சண்முகனாரை சிவாய குரு சண்முகனார் என்று அழைக்கிறார். தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானே
இவ்வாறு விளிக்கப்படுவார். சிவாய என்பதை
பரவுணர்வு நிலை என்று கொண்டால் அறிவின்மை என்ற இருட்டை விலக்கும், கு+ரு,
ஆக்னையில் பஏற்படும் உணர்வு நிலையே.
இவ்வாறு இத்தொடர் குண்டலினி யோக அனுபவத்துக்கும் பொருந்தும். இந்த நிலையை அடைய ஒருவர் தசதீட்சையில் முக்தி
பெற்றிருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
தச தீட்சை என்பது பத்து படிகளைக் கொண்ட ஒரு முறை. இது மனதிலும் உடலிலும் ஒரு மாற்றத்தை
ஏற்படுத்துவது. உடலில் ஏற்படும்
மாற்றங்கள் பருவுடலை ஒளியுடலாக்குகின்றன.
மனதில் ஏற்படும் மாற்றங்களை அகத்தியர் சக்தி தீட்சை சிவ தீட்சை என்று தனது
பரிபூரண சூத்திரம் 420ல் கூறியுள்ளார். இந்த தீட்சை ஒரு ஆத்மாவை பரவுணர்வு நிலையைப்
பெற ஏற்றதாக்குகின்றன. இந்த சண்முக
தியானத்தால் ஏற்படும் அனுபவம் மிக சூட்சுமமானது என்கிறார் அகத்தியர். இதை ஒருவர் வேதத்தின் முடிவில் அதாவது
கற்றுக்கொள்ளக் கூடிய எல்லாவற்றின் முடிவில், அனுபவத்தின் தொடக்கத்தில்
பெறுகிறார். இதற்கான மந்திரம் ஓம் கிலி
சிம் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment