Thursday, 25 June 2015

103. Agatthiyar's authoritative definition of Yoga

Verse 103
கண்டுபார் பூரணமே என்று போற்றி
கருணைவளர் கலைநாலுங் காணாமற்றான்
தொண்டரெனப் பசியடக்கி விரதங் காத்துச்
சுழன்று நின்ற வாசிதனை அடக்கி மைந்தா
நின்றநிலை காணாமல் நதிகள் தேடி
தேடினதால் மலைக்களெல்லாஞ் சுற்றிப்பார்த்து
ஒன்றுமிடம் அறியாமல் யோகஞ் செய்து
உடலுயிரைக் காணாமல் அலைவார் பாரே

Translation:
Seek and see it as the fully complete
Without seeing the merciful four kalas
Calling themselves as servitors, controlling hunger and performing austerities
Controlling the breath (vaasi) that circulates
Without knowing the status, seeking rivers
As sought, roaming searching all the mountains
Without knowing their location, performing yoga
They will drift without seeing the soul in the body.

 Commentary:
This verse establishes unequivocally the definition of yoga.  Yoga is not what it is popular as these days.  Yoga is seeing the four missing kala from the suryakala when the suryakala and chandrakala are in harmony.  This is the purpose and end goal of yoga, nothing else.  Instead, people call themselves spiritual, perform countless austerities, visit mountains/ rivers and thus waste their lives away as none of these will take them to their target.  They will never attain self awareness.


இப்பாடலில் அகத்தியர் யோகம் என்றால் என்ன என்று கன்னத்தில் அறைவதைப் போலக் கூறுகிறார். யோகம் என்பது தொண்டர் என்று கூறிக்கொண்டு விரதங்கள் ஜபதபங்கள் செய்வது இல்லை, காடுகள் மலைகள் ஆகியவற்றைத் தேடி ஓடுவது இல்லை, ஆசனங்களில் தேர்ந்தவராவது இல்லை.  யோகம் என்பது சூரிய கலையையும் சந்திர கலையையும் சேர்ந்திசைய வைத்து அப்போது மேலே சுழலும் வாசியைக் காண்பது.  இதுவே யோகத்தின் இலக்கான ஆத்ம தரிசனத்தைத் தரும்.  மற்ற யாவும் நேர விரயம் பொருள் விரயமே என்று அகத்தியர் பொட்டேனக்கூறுகிறார். 

No comments:

Post a Comment