Verse 101
காணடா நீராடி சிவனை நீயுங்
கண்டுமன துருதியின லம்பரத்தில்
கோணடா பெருவாசற் சென்று புக்கிக்
குணமான சுழிமுனையில் பத்திக் கொண்டு
ஊணடா வாசியினால் ஆறாதாரம்
ஊடுருவ நிராதாரம் அண்டம் மேவி
பேணடா அந்தநிலை தன்னில் நின்று
பிலமான ரவிமதியைத் தன்னுட் காணே
Translation:
See son, the
Siva, after bathing
Through mental
fortitude in the arena
Going to the
great threshold, entering it
Holding to the
tip of the whorl
Place firmly
through vaasi, the six adhara
Piercing them,
going to the niradhara (unsupported), universe, going there
Cherish it,
while remaining in that state
Seeing the sun
and the moon within.
Commentary:
Agatthiyar
summarises yogam as entering the great threshold, that in the muladhara through
mental fortitude, planting the vaasi firmly piercing the six adhara, going to
the niradhara or the space beyond the ajna, reaching the end of the space and experiencing
the sun and the moon while remaining in that state. This is Samadhi which is experiencing the
sivam. This is not a permanent state but
it gives a taste of the ultimate.
The sun and
the moon represent the kala or knowledge which will be explained in the next
verse.
அகத்தியர் யோகத்தை சுருக்கமாக இப்பாடலில் கூறுகிறார். யோகம் என்பது பெருவாயில் எனப்படும் மூலாதாரத்தில்
உள்ள வாயிலுள் மனவுறுதியினால் நுழைந்து அங்கு வாசியை அழுத்தமாக ஊணி ஆறு
ஆதாரங்களையும் துளைத்து ஏறி நிராதாரம் எனப்படும் ஆக்ஞைக்கு மேலே உள்ள இடத்தை
அடைந்து அங்கு அண்டம் எனப்படும் வெளியை அடைந்து அந்த நிலையில் நின்றபடி
சூரியனையும் சந்திரனையும் தன்னுள் காண்பது என்கிறார் அகத்தியர். இந்த உச்ச நிலையே
சமாதி எனப்படுகிறது. இந்த சமாதி
நிரந்தரமான நிலையல்ல. ஆனால் அது ஒரு சிறு
நேரம் இறைவனுடன் கூடுவது என்றால் என்ன என்று காட்டுகிறது. சூரிய சந்திரர்கள் என்பது கலைகளைக்
குறிக்கும். கலை என்பது அறிவைக்
கொடுப்பது. இந்த கலைகளை அகத்தியர் அடுத்த
பாடலில் விளக்குகிறார்.
No comments:
Post a Comment