Verse 90
வகையான வகையேது என்று கேட்டால்
மார்க்கமுடன் சரியைவழி நடந்தாயானால்
தகையாமல் சரியைவழி நடந்தாயானாற்
சிவ சிவா கிரியையுட வழியே காணும்
புகையாமல் கிரியை வழி நன்றாய்ப் பார்த்தாற்
பாலகனே யோகவழி பரிவாய்த் தோணும்
நகையாமல் யோக வழி தானே சென்றால்
நன்மையுடன் ஞான வழி காணலாமே
Translation:
If it is asked
what is the way,
It is if you
walk in the path of charya
If you walk in
the way of the charya
Siva sivaa the
path of kriya is seen
If you see the
path of kriya without the smoke
Little boy,
the path of yoga will appear with mercy
If travelled
through the path of yoga, without laughing,
The path of
wisdom can be seen.
Commentary:
First,
Agatthiyar described the basic 96 principles that constitute this world and a
human being. Then he described the
various cakras in the body, their diagram, worship methods and the effects that
such worship confers. Now he is beginning
to describe a four step approach that all the philosophical systems that follow
the agama recommend. This path is that
of charya, kriya, yoga and jnana. From
this verse we understand that this path is sequential. One begins with charya followed by kriya,
yoga and finallay the jnana. From the
previous verse we understand that this path will lead one to the perception of
the nondistinct state, that of Parasiva or singularity.
சௌமிய சாகரத்தைத் தொடங்கி முதலில் மனிதனையும் உடலையும்
படைக்கும் 96 தத்துவங்களை அகத்தியர் விளக்கினார். அதனை அடுத்து சூட்சும உடலில் உள்ள
சக்கரங்களையும் அவற்றின் வழிபாட்டு முறையையும் மந்திரம் யந்திரத்துடன் விளக்கி
அதனால் பெரும் நன்மைகளையும் கூறினார்.
இந்த நன்மைகளின் உச்சம் பரசிவ நிலையை அடைவது, ஒருமை நிலையை அடைவது. இதற்கான வழி நான்கு படிகளைக் கொண்ட சரியை,
கிரியை, யோகம் மற்றும் ஞானம் என்ற பாதையாகும்.
இப்பாடலிலிருந்து நாம் இந்தப் பாதை படிப்படியாகக் கடக்கவேண்டியது என்பதைப்
புரிந்துகொள்கிறோம்.
No comments:
Post a Comment