Monday, 8 June 2015

87. Guru dhyana and kechari

Verse 87
குருத்தியானம்
பண்ணப்பா தியானமது குருத்தியானம்
பரமகுரு சீர்பாதந் தியானங் கேளு
உண்ணப்பா கண்ணான மூலந் தன்னில்
முத்தி கொண்ட அக்கினியாஞ் சுவாலை தன்னை
நண்ணப்பா வாசியினால் நன்றாயூதி
நடுமனையைப் பிடித்தேறி நாட்டமாக
வின்ணப்பா கேசரியாம் புருவ மையம்
மேன்மை பெறத் தானிறுத்தி வசிவசி என்னே

Guru dhyana
Perform the contemplation of guru
Listen about the dhyana of the sacred feet of the supreme preceptor
Look at it in the eye, of the origin
The flame of fire, that of liberation
Blowing well through vaasi
Holding on to the house in the middle and climbing well
The sky, the kechari, the middle of the brow
Hold it there reciting vasi vasi.

Commentary:
From the above verses we see why the ajna is considered to be such an important cakra.  It is the junction between the Divine with a form and that of formless form.  After the contemplation of the flame and Bhairava Agatthiyar is describing the next dhyana, that of Guru.  Tantric tradition claims that the guru cakra is above the lalata and that it is the gateway to sahasrara.  Agatthiyar tells us that one should increase the fire of kundalini, the flame of liberation, by blowing hard with the help of vaasi or breath associated with life force, and climb to the guru cakra by holding on to the middle house, the ajna.  
The word kechari has several meanings.  It is a mudra where the tongue is rolled backed and made to touch the pineal gland which draws down the secretion which is said to confer immortality.  Kechari also means roaming in ka or space.  Thus, the yogi experiences allpervasive nature when he practices this mudra.  Some advanced yogis say that they bring the tongue to the middle of the brow.  Further discussion on this technique is beyond the scope of this commentary as one has to learn it from a guru and experience it personally.
Agatthiyar concludes this verse by saying that after reaching the right position one should recite vasi vasi.  Tirumular has mentioned in the ninth tantra that the mantra siva siva is kaarana panchakshara.  Recitation of this mantra removes the cause for one’s birth.  Vasivasi is another way of reciting this mantra.

முந்தைய பாடல்களில் அகத்தியர் முச்சுடர் தியானம் வைரவ தியானம் என்று பல அனுபவங்களைப் பேசியதிலிருந்து ஆக்ஞா சக்கரம் எவ்வளவு முக்கியமானது என்பது நமக்குப் புரிகிறது.  இது பரம்பொருளின் உருவ நிலையிலிருந்து அருவுரு நிலைக்கு ஒரு பாலமாக இருக்கிறது.
இதனை அடுத்து அகத்தியர் குரு தியானம் மற்றும் கேசரி முத்திரையைப் பற்றிப் பேசுகிறார்.  குரு சக்கரம் என்பது ஆக்ஞைக்கு மேலே சகஸ்ராரத்தின் வாயிலில் இருக்கிறது என்று தந்திர நூல்கள் குறிப்பிடுகின்றன.  இந்த தியான முறையை விளக்கும்போது அகத்தியர் ஒருவர் வாசியின் உதவியால் குண்டலினி அக்னியை நன்கு ஊதி அதிகரிக்கச் செய்யவேண்டும்.  பிறகு நடு வீடு எனப்படும் ஆக்னையிலிருந்து மேலே ஏறவேண்டும் என்கிறார்.  இதனை அடுத்து கேசரியில் நின்று வசிவசி என்று ஓத வேண்டும் என்கிறார்.
கேசரி என்ற சொல் கா எனப்படும் விண்ணில் உலவுபவன் என்று பொருள்படும்.  கேசரிமுத்திரையில் ஒருவர் தனது நாக்கை உள்ளே மடித்து சிறு நாக்கைத் தொடவேண்டும். அப்போது சகஸ்ராரத்திலிருந்து ஒரு திரவம் சுரக்கும்.  அது அமிர்தத்தைப் போல இனிக்கும்.  அதை உண்பவர் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வார் என்று யோக நூல்கள் கூறுகின்றன.  இந்தப் பயிற்சி யோகத்தில் உச்ச நிலையை அடைந்த யோகிகளுக்கானது.  இதை ஒருவர் ஒரு குருவிடமிருந்து கற்று சுயமாக உணரவேண்டும் என்பதால் இதைப் பற்றிய விளக்கத்தை இங்கே இத்துடன் நிறுத்திக்கொள்வோம். 
திருமூலர் திருமந்திரம் ஒன்பதாம் தந்திரத்தில் சிவ என்பது காரண பஞ்சாக்ஷரம் என்றும் அதை ஓதுபவர் பிறவிக்குக் காரணமானவை அனைத்தையும் தொலைக்கிறார் என்கிறார்.  வசிவசி என்பது சிவசிவ என்பதன் மறுஉருவம் ஆகும்.   


No comments:

Post a Comment