Verse 86
காணலாம் அவருடைய மூலங் கேளு
கனகரத்தின மானசிறு குழந்தை போலத்
தோணலாம் புருவநடுக் கமலந் தன்னிற்
சுகமாகச் சொரூப நிலை கண்டாயானால்
பேணலாம் அவர்பதத்தைத் தியானஞ் செய்து
பெருமையுடன் மானதமாம் பூசை செய்தால்
பூணலாஞ் சகலவரங் கைகுள்ளாகும்
பொற்கமல வைரவனைத் தியானம் பண்ணே
Translation:
His origin can
be seen, listen
Like a small
child who is golden and ruby like hued
Will appear in
the lotus in the middle of the brow
If you see the
original form
You can
nurture his sacred feet/locus through contemplation
If the
glorious mental worship is performed
All the boons
will come under control
Contemplate on
the golden lotus Bhairava.
Commentary:
After
mentioning that Bhairava is the protector of the locus Agatthiyar described his
mantra in the previous verse. Here he
describes Bhairava’s locus and form.
Agatthiyar says that Bhairava appears like a small child who is golden
and ruby hued. He appears at the ajna cakra. When one obtains his vision and contemplates
on his form, all the boons will come under control.
Bhairava
dhyana describes another stage in the ascent of consciousness.
வைரவர் க்ஷேத்ர பாலர் என்று கூறி அவரது மந்திரத்தை முந்தைய
பாடலில் உரைத்த அகத்தியர் இப்பாடலில் அவரது உருவத்தைப் பற்றியும் இடத்தைப்
பற்றியும் சொல்கிறார். வைரவர் காண்பதற்கு
தங்க நிறமான ரத்தினத்தின் நிறம் கொண்ட குழந்தை உருவை உடையவர் என்றும் அவரை ஆக்ஞா
சக்கரத்தில் காணலாம் என்றும் கூறும் அகத்தியர் அவரது தரிசனத்தைப் பெற்று அவரது
பதத்தை ஒருவர் தியானித்தால் எல்லா வரங்களும் கைக்கூடும் என்கிறார்.
வைரவர் தரிசனம் உணர்வு எழுச்சியில் ஒரு நிலை என்பது
இதிலிருந்து தெரிகிறது.
No comments:
Post a Comment