Monday, 22 June 2015

99. Union of eight and two in Sivalaya and rivers

Verse 99
தள்ளடா தனையறியா மூடர்தன்னை
தள்ளி மனையேறி மனஞ் சாந்தமாக
அள்ளடா எட்டெழுத்துஞ் சிவமதாகும்
உறுதியுள்ள இரண்டெழுத்துஞ் சத்தியாகும்
நில்லடா எட்டிரண்டும் ஒன்றாய் நின்ற
நிலையான சிவாலயங்கள் நதிகள் தன்னை
அல்லடா அந்தநிலை காணார் எல்லாம்
அலைவார்கள் கிரியை வழி அறியார்தானே

Translation:
Dismiss the fools who know not their self
Pushing away climb to the house with a calm mind
Collect. The letter for eight is sivam
The firm letter for two is Sakthi
Remain with the eight and two being together
The locus, the Siva temples and rivers
Those who have not seen that state
Will roam around.  They are ignorant of the path of kriya.

Commentary:
Agatthiyar is describing an esoteric usage in the siddha marga.  “eight and two” is an important concept in the Tamil Siddha philosophy.  The Tamil letter for number eight is “a” and for two is “u”.  Thus, eight and two are akara and ukara.  Akara represents Siva and ukara represents Sakthi.  The ultimate goal of kriya is to experience the union of Siva and Sakthi, the joining of eight and two.  The path that leads to this experience is true kriya.  This union occurs in every chakra that Agatthiyar refers to as Sivalaya and the nadi or energy channels that he calls as rivers.  Thus, the yogin experiences a complete union of the duality, Siva and Sakthi, at the end of the kriya. 


அகத்தியர் இப்பாடலில் சித்த மார்க்கத்தின் ஒரு முக்கிய பரிபாஷையை விளக்குகிறார்.  எட்டு இரண்டு என்ற பரிபாஷை சொற்களை எல்லா சித்தர் பாடல்களிலும் காணலாம்.  எட்டு என்பது அகாரம்.  தமிழில் எட்டு என்ற எண்ணுக்கான எழுத்து அ.  இரண்டு என்ற எண்ணுக்கான எழுத்து உ.  இவ்வாறு எட்டு இரண்டு என்றால் அகார உகாரங்கள்.  அகாரம் என்பது சிவன் என்றும் உகாரம் என்பது சக்தி என்றும் அகத்தியர் குறிப்பிடுகிறார்.  இவை ஒன்றாக இருக்கும் நிலை, சிவ சக்தி ஐக்கியமாகும்.  இந்த ஐக்கியத்தை உணருவதே கிரியையின் குறிக்கோள்.  இந்த ஐக்கியம் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒவ்வொரு நாடியிலும் நிகழ்கிறது.  இதைத்தான் அகத்தியர் சிவாலயங்களிலும் நதிகளிலும் இந்த எட்டு இரண்டு சேர்ந்திருக்கும் நிலையைக் காணலாம் என்கிறார்.  இதை உணராதவர்கள் கிரியை வழியை அறியாதவர்கள் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment