Verse 437
மந்திரவாள் தியானம்
கெதியான கேசரமே மணியின் சோதி
கணேசனடி மூலமடா ஆதியந்தம்
மதியான மையமடா ருத்திரமூலம்
மகத்தான வாசியடா சீம் றீங்கென்று
விதியான எழுத்தறிந்து ஓதுதற்கு
விளம்பரிது ஓங்கார விஞ்சை மூலம்
பதியான பதியறிந்து மந்திரவாளை
பத்தி மனங் கொண்டபடி இன்னங் கேளே
Translation:
Dhyana of the
magical sword
The path of
kecharam is the effulgence of the jewel
The bottom
terminus of Ganesan is the beginning
The middle,
that of the mind is the rudra mula
The great
vaasi is shreem reeng
To recite,
knowing the letters
It is hard to
explain. The origin, the omkara
Knowing the
locus, the magical sword
Mind with
devotion, listen some more.
Commentary:
Kecharam means
roaming in space. The space is the
sushumna nadi in the body and beyond the sahasrara. Thus when the yogin’s consciousness roams in
the gathi or path it experiences the effulgence of the jewel at the ajna. The ajna is the top terminus the bottom
terminus being muladhara the locus of Ganesha and the middle locus is anahata,
the locus of Rudra. The mantra for vaasi to go through this path is shreem and
reeng. These mantra are part of the
total sequence that should be uttered.
Agatthiyar is not giving the full mantra as it should be learnt from a
guru. Agatthiyar introduces a new
concept, the magical sword, here. The
last two lines can be explained as “holding the magical sword listen to the
nature of the mind” or by holding on the magical sword with mind sufficed with
devotion.
An important
step in Srividya upasana is reciting the Devi Kadgamala stotra. Kadgam means sword. Agatthiyar is referring to that concept
here. As this stotra has several bhija
akshara ne has to say it only after getting upadesa from a guru.
கேசரம் என்றால் வெளியில் சுற்றுதல் என்று பொருள். இங்கு வெளி என்பது உடலினுள் சுழுமுனை நாடி,
உடலின் வெளியில் பரவெளியாகும். இந்த
கதியில், வழியில், போகும் யோகி ஆக்ஞையில் மணியின் ஒளியைப் பார்க்கிறார். இவ்வாறு இந்த வழியின் முடிவு ஆக்ஞை, முதல்
கணபதியின் இடமான மூலாதாரம். நடுவில் இருப்பது
ருத்திரனின் தளமான அனாகதம். வாசிக்கான
மந்திரம் ஸ்ரீம் ரீங். இந்த மந்திரங்கள்
முழு மந்திரத்தின் பகுதியாகும். அதை
ஒருவர் குருமுகமாகவே அறிந்துகொள்ள வேண்டும் என்பதனால் அகத்தியர் இந்த முக்கிய
பீஜங்களை மட்டும் கொடுத்துள்ளார். இப்பாடலில்
மந்திர வாள் என்ற ஒரு புதிய கருத்தைக் கூறுகிறார் அகத்தியர். கடைசி இரண்டு வரிகளுக்கு மந்திர வாளைப் பற்றி
மனத்தைக் கொண்டு கேள்” அல்லது “மந்திரவாளை பக்தி தோய்ந்த மனத்தைக் கொண்டு கேள்” என்று
பொருள் கூறலாம்.
ஸ்ரீவித்யா உபாசனையில் தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் என்ற
ஒன்று சொல்லப்படுகிறது. கட்கம் என்றால் வாள்.
இப்பாடலில் அகத்தியர் இதை மந்திர வாள் என்கிறார். பல பீஜ மந்திரங்களைக் கொண்ட
இந்த ஸ்தோத்திரத்தை குருமுகமாக உபதேசம் பெற்ற பிறகே சொல்ல வேண்டும்.
மந்திரவாள் என்பதை ஒரு குறியீடாகக் கூட கொள்ளலாம். அங்கிருந்து தியானம் செய் என்பது போல
ReplyDeleteஅடுத்த பாடல்களில் அகத்தியர் மந்திர வாளைப் பற்றி சில தகவல்களைத் தருகிறார். ஆம் இவை தியானத்தைச் சேர்ந்த குறியீடுகள்
ReplyDelete