Verse 422
செயலான செயலறிந்து செயலைக் காண
திறமான தீர்க்கமொன்று செப்பக் கேளு
மயலான மயக்கறுத்து மவுனங்கொண்டு
மகத்தான கேசரியாம் அண்டத்தேகி
சுயமான பூரணமாஞ் சோதித் தாயை
சுத்தமுடன் தான் வணங்கி தொழுது போற்றி
நயமாக வைத்துருமை செய்து கொண்டு
நாதாந்த பூரணத்தை நயமாய் வாங்கே
Translation:
To see the
action of the amazing action
Listen to me
tell you a firm method
Cutting away
the delusion of maya, holding silence
Going to the
macrocosm, the kechari
The pure,
poorna, mother effulgence,
Saluting her,
praising her, worshipping her
Holding her
firmly
Receive the
nadhantha poornam, ably.
Commentary:
Agatthiyar is
describing a method to perceive the action of poornam or consciousness. He says that Sakthi, the mother, the poornam
should be worshipping, reaching the macrocosm, the kechari. This means the dvadasantha or the spot in
space, beyond the sahasrara. This will
grant the nadhantha poornam to the worshiper.
பூரணத்தின் செயலை எவ்வாறு காண்பது என்று அகத்தியர்
இப்பாடலில் கூறுகிறார். பூரணம், சோதித்தாய் எனப்படும் சக்தியை அண்டம் எனப்படும்
கேசரியை அடைந்து தொழுது பணிய வேண்டும்.
அவ்வாறு வழிபட்டால் நாதாந்த பூரணம் கிட்டும் என்கிறார் அகத்தியர். இங்கு அண்டத்தில் குறிப்பிடப்படும் இடம்
துவாதசாந்தம் எனப்படும் சகஸ்ராரத்துக்கு மேற்பட்ட இடமாகும். இது உடலுக்கு அப்பால், வெளியில் இருக்கிறது. இதனால், சக்தியின் அருளே ஒருவருக்கு உச்ச
நிலையை அளிக்கிறது என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment