Tuesday, 7 June 2016

417. Definition of Adhi

Verse 417

ஆதிஎன்ற நாதமடா சோதி சோதி
அதையறிந்து பூரணமாய்ப் பூசை செய்தால்
சோதிஎன்ற ஞானமது இதுதான் ஆச்சு
சுகமான சிவயோக மிதுதானாச்சு
நீதிஎன்ற பிராணாய மிதுதானாச்சு
நிசமான வாசியது மிதுதானாச்சு
ஓதியதோர் மந்திரமு மிதுதானாச்சு
உண்மையென்ற பூசையது மிதுதானாச்சே

Translation:
The Adhi, the nadha is the effulgence, jyothi,
If you performing puja knowing it fully/as poornam
It became the jnana, the jyothi.
It became the sukha siva yogam
It became the neethi, the pranayama
It became the truth, the vaasi
It became the mantra recited
It became the truth, the puja

Commentary:
In the previous verse Agatthiyar mentioned that if a yogin performs siva sakthi puja, knowing the guru and remains at the third eye, the ajna he will see the siva rupa and the adhi.  In this verse he defines the aadhi.  It is the nadha which is also the effulgence.  The nadha or the primordial sound is the first manifestation following Siva and Sakthi.  Nadha gives rise to bindu or the primordial form.  Agatthiyar says that the nadha is the effulgence of wisdom, the sivayogam, the pranayama, the vasi, the mantras recited and the truth or puja.


முந்தைய பாடலில் அகத்தியர் ஒரு யோகி, குருவைப் பார்த்து, சிவசக்தி பூசை செய்து, ஆக்னையில் கவனத்தை நிறுத்தினால் அவருக்கு சிவரூபமும் மனத்தெளிவும் ஆதியின் தரிசனமும் கிட்டும் என்றார்.  இப்பாடலில் அவர் ஆதி என்பது நாதம் என்று விளக்குகிறார்.  ஒருமை நிலையில் இருக்கும் இறைமை பலவாக, பிரபஞ்சமாக விரியும்போது சக்தி, சிவ தத்துவங்களுக்குப் பிறகு தோன்றுவது நாதமாகும்.  இந்த நாதமே பிந்து எனப்படும் உருவை ஏற்படுத்துகிறது.  இந்த நாதம்தான் ஆதி, சோதி, ஞானம் ஜோதி, சுக சீவ யோகம், நீதி, பிராணாயாமம், உண்மையான வாசி, ஓதப்படும் மந்திரங்கள், உண்மையான பூசை என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment