Verse 414
கற்பம்
மனதான மனதறிந்து மனத்தைக் காக்க
மார்க்கமுள்ள கற்பமொன்று வழுத்தக் கேளு
கனமான கற்பமடா ஆர்தான் காண்பார்
கருணைவளர் உகாரமடா சத்தி சத்தி
குணமான உகாரமென்ற சத்தி தன்னை
குருவருளால் அந்திசந்தி பூசை பண்ணிச்
சினமான ஆங்காரத் திறுக்கறுத்து
சின்மயங் கொண்டென்னாளும் திறமாய் நில்லே
Translation:
Karpam
To know protect the mind, knowing about it
Listen to me describe the karpam, the path
The heavy karpam- who will see it?
The merciful ukara is sakthi, sakthi,
The quality, ukara the sakthi-
Worshipping it during andhi and sandhi (terminus and twilight)
Cutting away the anger, the ahamkaram
Remain, adorning chinmayam, always.
Commentary:
Karpam means a path, a way to reach to something. The path that Agatthiyar describes in this
verse is sakthi. It is through sakti
that the soul reaches the supreme state.
Hence, sakthi is the karpam.
Siddhas explain the relationship between siva and sakthi as the gemstone
and its effulgence, a flower and its fragrance.
Thus, sakthi is the guna of siva.
Hence, worshipping Sakthi is worshipping the saguna form of Brahman. She, the ukara, should be worshipped during
andhi and sandhi.
The words andhi and sandhi have an interesting
meaning. Andhi means terminus. The terminus is the peak or the end of
something. In kundalini yoga the andhi
are the muladhara and the supreme state.
Sandhi is the point where they meet.
The universal energy and limited energy in the body meet at every
chakra. For example when we look at
Sivavaakiyar’s expression sivayavasi is two headed fire “iruthalaikkoLLi” it
means the two fires, the kundalini in the body and the sikaara, the effulgence
or jyothi form, the ultimate state are the termini represented by si. The sandhi or the meeting point is ya or the
ajna cakra, the sky principle. Hence,
Siddhas say that the soul should look at muladhara and ajna together, keeping
its mind unwavering and consciousness in the turya state.
Agatthiyar begins this verse by mentioning the mind. He says the nature of the mind must be known
to protect it. The mind is the cause for
attachments, limitations. Agatthiyar has said elsewhere that when the mind is
perfected there is no need to recite any mantra- “manamadhu semmaiyaanaal mandiram
jebikka vendaam”. Bhagavan Ramana
Maharishi equated the mind to a stick with which one stokes the fire. It is held until the end and then the stick
is also thrown into the fire. The mind
is held until the last point at which it is also given up. Hence, Agatthiyar says that one has to know
the nature of the mind and protect it. The
way to protect the mind is by cutting away anger, the sign of ahamkara. One has to remain as chinmaya or embodiment
of consciousness to travel in the path of sakthi.
கற்பம் என்றால் பாதை என்று பொருள். இங்கு அகத்தியர் விளக்கும் பாதை சக்தி. சக்தியின் வழியில் பயணித்து ஆன்மா உச்ச நிலையை
அடைகிறது. சித்தர்கள் சிவனுக்கும்
சக்திக்கும் இடையே உள்ள உறவை விளக்க ரத்தினமும் அதன் ஒளியும், மலரும் அதன் மணமும்
என்று கூறுகின்றனர். சக்தி சிவனின் குணமாகும். அதனால்தான் சிவனையும் சக்தியையும் பிரிக்கமுடியாது
என்கின்றனர். இவ்வாறு சக்தியை வழிபடுவது
என்பது சகுண பிரம்மன் வழிபாடாகிறது.
சக்தியை ஒருவர் அந்தி சந்தியில் வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர்.
அந்தி சந்தி என்ற சொற்கள் ஒரு சுவாரசியமான பொருளைக்
கொண்டுள்ளன. அந்தி என்றால் ஒன்றன் முடிவு,
உச்சம். குண்டலினி யோகத்தில் முடிவு என்பது
மூலாதாரம் மற்றும் உச்ச பரநிலைகளாவை.
இங்கு சிவவாக்கியரின் தொடர், “சிவயவசி என்பது இருதலைக் கொள்ளி” என்பதைப்
பார்ப்போம். சி என்பது அக்னியைக்
குறிக்கும் எழுத்து. அக்னியின் அந்திகள்
உடலில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி மற்றும் உச்ச நிலையான சிகாரம் அல்லது அக்னி
ஸ்வரூபமான மகாகாரண சரீரம். இந்த இரண்டும்
சந்திக்கும் இடம் வெளி, அதைக் குறிக்கும் எழுத்து ய எனப்படும் ஆகாயம். அது உடலில் ஆக்ஞா சக்கரமாகவும் வெளியில்
பரவெளியாகவும் உள்ளது. இவ்வாறு இரண்டு தீக்கள், கொள்ளிகளைக் கொண்டது சிவயவசி என்று
கூறுகிறார் சிவவாக்கியர். இதனால் அந்தி
என்பது மூலாதாரம் மற்றும் மகா காரண சரீரம் என்றும் சந்தி என்பது வெளி அல்லது ஆக்ஞா
சக்கரம் என்பதும் புலப்படுகிறது. இந்த
இடங்களில், நிலைகளில் சக்தியை வழிபடவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.
இப்பாடலை அகத்தியர் மனதைப் பற்றிக் கூறுவதாகத்
தொடங்குகிறார். மனத்தைக் காக்க அதன் தன்மையை அறியவேண்டும் என்கிறார் அவர். வேறொரு இடத்தில் அவர் மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்க வேண்டாம் என்று கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும். பகவான் ரமணர் மனத்தை நெருப்பைக் கிளரும் ஒரு
குச்சி என்கிறார். அந்த குச்சியினால் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்துவிட்டு
முடிவில் அந்தக் குச்சியையும் தீயினுள் இட்டுவிடுவதைப் போல மனத்தை கடைசிவரை அடையப்
பயன்படுத்திவிட்டு முடிவில் அதையும் விட்டுவிட வேண்டும். இந்த மனத்தை எவ்வாறு காப்பது என்றால்
அதிலிருந்து கோபம் என்னும் அகங்காரத்தை விலக்கவேண்டும். சின்மயமாக நிற்கவேண்டும்
என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment