Friday, 10 June 2016

419. Bala

Verse 419
வாலை தீக்ஷை
கருத்தறிந்து கருணையுடன் கருவைக் கொண்டால்
காலசதி மேலசதி காணாது ஓடும்
திருத்தமுடன் பேரானந்தமும் நிலைநின்றாடும்
திருவான வாலையுட செந்தேனாலே
வருத்தமென்ற மாய்கைஎல்லாம் மாண்டு போகும்
மங்கையுட கொங்கையது வலுமை மெத்த
திருத்தியந்த மாதரசைப் பூசைபண்ணி
செம்மையுள்ள மாதாவாய் மகவாய் எண்ணே

Translation:
Vaalai deekshai
Knowing the idea and accept the essence with mercy,
The “kaalasadhi mela sadhi” will run away to oblivion
The great bliss will dance permanently
Due to the verdant honey of the vaalai, the thiru
All the sorrow, the maya will die
The breast of the lady is very strong
If that great lady is worshipped correctly
Consider her as the mother and as the child.

Commentary:
Agatthiyar is talking about Bala worship, the first step in SriVidya upasana, here.  Vaalai in Tamil is Bala in Sanskrit.  Thus, Vaalai Deekshai is Bala deeksha.  Agatthiyar says that when one understands the essence of the Siddha philosophy and accept the essence then time or space will not limit the person.  He calls them as sadhi or evil plot.  These will run away.  The person will experience great bliss. There will be no sorrow as the maya manifests as sorrow will become nonexistent.  The “breast of the lady” means the essence she offers.  Tamil Siddhas and other saints describe Sakthi as the mother who feeds her milk to the devotee.  This means she gives her essence to her child, the devotee, the yogi.  Agatthiysr says that this lady, Vaalai should be worshipped as a mother and as a child.

Bala is considered as a nine year of girl. Sundari is a beautiful maiden and Tripura Bhairavi is an old woman.  Agatthiyar is considered as the proponent of Sri Vidya upasana.  Here he is talking about the first step in this upasana.  One cannot completely describe Bala or the upasana here.  Please refer to the sites given below to learn further.   Suffice to say that Bala is the prana of Sri Lalitha.  She is said to reside at the base of Devi’s peeta. 

இப்பாடலில் அகத்தியர் பாலா திரிபுர சுந்தரி  வழிபாட்டைக் குறிக்கிறார்.  பாலா என்பவளே தமிழில் வாலை எனப்படுகிறாள்.  இவ்வாறு வாலை தீட்சை என்பது பாலா தீட்சை ஆகும்.  ஒருவர் சித்தர் தத்துவத்தின் கருத்தை அறிந்து அதன் கருவை ஏற்றுக்கொண்டு நின்றால் காலமோ இடமோ அவரைக் கட்டுப்படுத்தாது என்கிறார்.  இதுவே காலசதி மேல சதி என்று குறிப்பிடப்படுகிறது.  இந்த யோகி மாயையான துன்பத்தை அனுபவிப்பதில்லை.  “மங்கையின் கொங்கை” வலுவானது என்கிறார் அகத்தியர்.  பொதுவாக ஞானிகளின் பாடல்களின் சக்தியின் கொங்கை குறிப்பிடப்படுவதற்குக் காரணம் சக்தி தனது பாலை, உயிர்ச்சத்தை, சாதகனுக்கு ஊட்டுகிறாள் என்பதை விளக்குவதற்கே.  இந்த மங்கையை ஒரு தாயாகவும் மகவாகவும் வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர். 
பாலா என்பவள் ஒன்பது வயதுக் குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள்.  பாலையின் வழிபாடு ஸ்ரீ வித்யா சாதனையின் முதல் படியாகும்.  அகத்தியர் ஸ்ரீவித்யை உபாசனையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.  ஸ்ரீவித்யை உபாசனையையும் பாலையைப் பற்றியும் ஒருவர் குருமுகமாக அறிந்துகொள்ள வேண்டும்.  இதைப் பற்றிப் பொதுவான விவரங்களை அறிய கீழ்காணும் தளங்களைப் பார்க்கவும்.  பாலை என்பவள் ஸ்ரீ லலிதாம்பிகாவின் பிராண சக்தி, அவள் தேவி பீடத்தின் கீழ்ப்பகுதியில் குறிக்கப்படுகிறாள் என்பதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

1 comment:

  1. Thank you Sri Harimankantan for Bala worship details.
    http://sadhanandaswamigal.blogspot.in/2016/06/worship-of-sri-balambika.html

    ReplyDelete